ஈழத் தமிழர்களின் குடிசனப் பரம்பலை எவ்வாறு சீராக்கலாம்..?

(சாகரன்)

இலங்கையில் ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் சனத் தொகைப் பரம்பல் தொடர்ச்சியாக வீழ்சியடைந்து வருவது யாவரும் அறிந்ததே . அதிலும் வடபகுதியில் சிறப்பாக யாழ்ப்பாணக் குடா நாட்டில் சீரான குடிசனப் பரம்பல் ஏற்பட்டு இருந்தால் இன்று 12 இலட்சம் வரையிலான மக்கள் தொகை இருக்க வேண்டிய சூழலில் அதன் பாதியாகவே தற்போது சனத் தொகை இருப்பதும ஆரோக்கியமான நிலமை அல்ல.