ஈழத் தமிழர் அரசியல் அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல்கள்

ஈழத் தமிழர் அரசியல்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உள்ளூராட்சி சபை தேர்தல்கள்

ஈழத்தில் தமிழர் பகுதிகளில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசாரங்க்ச்ள் தீவிரமடைந்துள்ள சூழ் நிலையில் .இத் தேர்தலில் நம் மக்கள் மாற்றத்துக்கும் புதிய சிந்தனைகளுக்கும் முற்போக்கு கொள்கைகளுக்கும் உள்ளூர் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாக்களிக்க வேண்டும்.

இன்றய நிலையில் ஈழத் தமிழர் அரசியலில் மாற்றம் ஒன்றை வேண்டி மக்கள் மன நிலையில் மாற்றங்கள் ஏர்பட்டிருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இளைஞர்களும் அனுபவமுள்ள பல புதிய முகங்களும் நீண்ட சௌகச் சிந்தனையுடன் செயல்பட்டவர்களும் சமூக அக்கறையுடன் தொழிற்பட்டவர்களும் களத்தில் உள்ளனர்.

முதல் முறையாக அதிகளவு பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் .

இந்த ஒரு பின்னணியில் நாம் முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் .

அரசியல் என்பது வெறும் அப்புக்காத்து மேட்டுக் குடிகளுக்கானது மட்டுமல்ல சாதாரண மக்களுக்கானது என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும் .

களத்தில் உண்மையாக உழைத்தோர்க்கு வாக்களியுங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களை காண வருபவர்களை புறக்கணியுங்கள்.

தலமையும் அரசியல் முக்மும் கடைகளில் வாங்கும் ச்ரக்கல்ல.அது மக்களுக்கானது மக்களிடமிருந்தே அதிகாரம் பிறக்கிறது.

அதிகாரத்துக்கும் மேட்டுக் குடி மனோபாவத்துக்கும் கனவான் அரசியலுக்கும் ,திமிர் தனத்துக்கும்,மற்றவர்களை கிள்ளுக் கீரையாக எண்ணும் அரசியல் மனோபாவத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய தருணமிது.

அரசியல் என்பது வெறும் சட்டப் புத்தகங்களுக்குள் மாத்திரம் முடங்கிக் கிடப்பதல்ல எதோ ஒரு வகையில் பாராளுமன்ற கதிரைகளில் அமர்ந்து விட்டால் அரசியல் ன்௺அனம் பெற்ற நம் தமிழ் தலைமைகள் .

அரசியல் என்பது சமூக பொருளாதார கலாசார பண்பாட்டு கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது ஆனால் நாம் நம் மக்கள் இதுவரை தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் வெறும் மாய மான்கள்.

இந்த மாய மான்களை புறம் தள்ளி புதிய சிந்தனையாளருக்கு மக்கள் மையப் பட்ட கொள்கையாளர்களுக்கு வாக்களியுங்கள்.

நாளை நமதே என்று நடை போடுவோம்

(Balasingam Sugumar)