ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..

(இது ஒரு முகப்பு புத்தகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PFLP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்தPFLP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட ஐநா மத்தியஸ்தத்துடன் நடைபெற்று ஏற்பட்ட ‘அரசியல் தீர்வு?” ஒப்பந்தத்தை (Oslo Accords) யும் இதனைத் தொடர்ந்து எற்பட்ட யாசீர் அரபாத் தலமையிலான பாலஸ்தீன அரசுச் செயற்பாட்டையும் PFLP ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது தொடர்ந்தும் தனது அரசியல் கொள்கை ரீதியிலான போராட்டதை செய்தே வருகின்றது. இந்த அமைப்பைத் தவிர ஏனைய அமைப்புக்கள் இடதுசாரி சிந்தனைக்குள் உள்ளாகாத அமைப்புக்கள் என்பதினால் வலதுசாரி மேற்கத்திய நாடுகளும் இதனை பலவீனமடையச் செய்வதில் தனியான ஒரு வேலைத் திட்டத்தைக் தமக்குள் வகுத்து செயற்பட்டு இவ் அமைப்பை பலவீனமடையச் செய்திருக்கின்றன. ஆனாலும்……. இப்போதும் இவ் அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் லைலா காலித், முதலாவது பாலஸ்தீன பெண் போராளி. லைலா காலித் போன்ற தலைவர்கள், டமாஸ்கஸ்ஸில் இருந்தார்கள். தற்போது அங்கே நடக்கும் யுத்தத்தின் பின்னரும் அங்கேயே இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. பாலஸ்தீன பகுதிகளான, மேற்குக் கரையிலும், காசாவிலும் இப்போதும் PFLP உறுப்பினர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக இளம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஹமாஸ், பதாவுடன் ஒப்பிடும் பொழுது, உறுப்பினர் எண்ணிக்கையும், செயற்பாடுகளும் மிகக் குறைவு. அண்மைக்காலத்தில் இராணுவ நடவடிக்கைகள் எதிலும் இறங்கவில்லை. பொதுவான அரசியல் நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களுக்கான சட்ட ஆலோசனைகள், யூத இடதுசாரி அமைப்புடன் சேர்ந்து வீடியோ பிரச்சாரம் செய்வது, தற்போதைய பாலஸ்தீன அரசில் இவர்களின் இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகி செயற்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர். இவற்றை தவிர குறிப்பிடத் தக்க எந்த செயற்பாடும் இல்லை. இதே மாதிரியான செயற்பாட்டை நாங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திலும் காண முடியும்.(கலையரசன் தா இன் பதிவுகள் உசாத்துணையாக பாவிக்கப்பட்டன)
Eelapriyan Balan Siva Easwaramoorthy சரி புலிகள் பிரேமதாசா காலத்து தேனிலவையும் அக்காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமாற்றங்களையும் விடுவோம். அதன் பின் மூன்றாவது ஈழப்போர் 1990 யூனில் தொடங்கியதன் பின்னர்தானே வடகிழக்கு மாகாணசபையின் முதுகெலும்பான அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. தமிழர் விடுதலை கூட்டணியினர் இந்தியாவிடம் முறையிட்டும் இந்தியாவினால் அந்த அதிகார பறிப்பிற்கெதிராக எதையும் செய்துவிடமுடியவில்லையே! ஏன்? மாகாண அரசென்பதே இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு இலங்கையின் அதாவது ஸ்ரீலங்காவின் சட்டவரம்பினுள் அமைக்கப்பட்ட ஒன்றுதானே! எப்போதுமே மகாவம்ச மனவமைப்பினுள் இருந்துவரும் சிங்களம் தனது பலம் பராளுமன்றில் இருக்கும்போது எந்தவிதமான சட்டத்தையும் திருத்தலாம் இல்லை நிறைவேற்றலாம். மொத்தத்தில் சிங்கள சட்ட அடிப்படையில் கட்டப்பட்ட தமிழரின் ஆகாசகோட்டைதானே இந்த மாகாணசபை என்பதுவே! இதைவைத்து எதனை சாதிக்கலாம் என்கின்றீர்கள்?
Siva Easwaramoorthy போரட்டம் சிதைக்கபட்டுவிட்டது என்பதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. போராட்டத்தை சிதைக்கவே ஒப்பந்தத்தை அமெரிக்கா ஐநா கூடாக திணித்தது. இதனாலேயே பிஎல்எவ்ரி போன்றவை இதனை ஆதரிக்கவில்லை. சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொணடவர்களும் இதனை வெற்றியளிக்கும் போக்கில் நகர்த்திச் செல்லவில்லை. ஆனால் பாலஸ்தீன மக்களின் பிரச்சனையும் இவர்களுக்கான வாழ்தலுக்கான பிரச்னையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அகதி முகாமில் தமது மொத்த வாழ்வையும் தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த மக்களின் போராட்டதில் உள்ள நியாயத் தன்மையையும், இருப்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஈழத் தமிழருக்கும் இன்ன பிற ஒடுக்கப்படும் மனிதக் குழுமங்களுக்கும் பொருந்தும் உரிமை மறுக்கப்பட்ட சமூகம் இன்றில்லாவிட்டாலும் என்றோஒரு நாள் ஏதோ ஒருவடிவத்தில் போராடித்தான் தீரும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். – Siva Easwaramoorthy

இலங்கை விடயத்தில் இந்திய உப கண்டம் இந்து சமுத்திரப் பிராந்தியம் போன்ற பூகோள நிலமைகளை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்தியா தனது நலன்களின் அடிப்படையிலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதுவும் உண்மை. நாம் இதில் உள்ள எமது நலன்களின் அடிப்படையில் இதனை நகரத்திச் செல்வதில் பலரும் சுயநலன்களைத் தூக்கிப்பிடித்து தவறான அரசியல் செயற்பாடடை செய்து விட்டனர். இதில் இன்னொரு முக்கிய விடயம் இந்தியாவையும் போராளிக் குழுக்களையும் கொழுவி விடுவதற்கான ஜே. ஆர் இன் நரித்தனத்திற்கு புலிகள் செயல்வடிம் கொடுத்தது நாம் இங்கு தோற்றுப் போனதற்கும் முக்கிய காரணம் ஆகும். அமெரிக்காவின் கைபாவையான வி.பி. சிங்கிடம் ஆட்சிமாற்றம் சென்றதும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப் படவேண்டிய விடயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையேயான சண்டை இதில் நடந்த தவறுகள் இதில் மாகாண சபையை ஆட்சியில் வைத்திருந்த ஈபிஆர்எல்எவ் ஐ இணைத்து எல்லாவற்றையும் குழப்புதல் சரியானது அல்ல. புலிகளின் கொலைத் தாக்குதலுக்கு தன் தன்னை தற்காத்துக் கொள்ள சமாதானப் படையாக வந்திருந்த இந்திய இராணுவத்தை தங்கியிருத்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதில் இலங்கை அரசினதும் புலிகளினதும் போர்கள் இவர்களை கூடாதவர்கள் என்று காட்டுவதற்கும் ஏதுவாக அமைந்து விட்டது இதில் யுத்தம் புரிந்த புலிகளையும் இந்திய இராணுவத்தின் தவறுகளையும் ஈபி ஆர்எல்எவ் மீது பொத்தாம் பொதுவில் போடுவது சரியானதும் அல்ல. உண்மைகளைப் புலிகள் போன்று திசைதிருப்பும் செயலும் ஆகும். – Siva Easwaramoorthy

புலிகள் பிரேமதாசா காலத்து தேனிலவையும் அக்காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமாற்றங்களையும் விடுவோம்….. ‘ -என்று இவற்றை விட்டுவிட்டுத்தாண்டிப் போக முடியாது இவற்றை மிகவும் ஆழமாக சீர்தூக்கிப்பார்க்கவும் வேண்டும். – Siva Easwaramoorthy
அன்றைய காலகட்டத்தில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண ஆட்சி ‘மகாண சபை’ என்று அல்ல ‘மகாண அரசு’ என்றே அழைக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. இது வெறும் வார்த்தைகள் அல்ல இதற்குள் பல அதிகார வரம்புகள்( இதன் அர்த்தம் இது முழுமையானது என்பது அல்ல) இருந்தே வந்தன. முதல் அமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு பொலிஸ் அதிகாரம் 13 வது திருத்தச் சட்டத்திற்குள் இருந்தது. வடக்கு கிழக்கு மகாணத்திற்கான பிரதி பொலிஸ் மாஅதிபர்(டிஜிபி)(Deputy director general of police) யாக ஆனந்தராஜ நியமிக்கப்பட்டிருந்தார். மகாண அரசின் தனிப் பொலிஸ் படை அமைப்பதற்கான ஆள் திரட்டல்கள் நடைபெற்றன. சிவிஎவ் என்ற படைப்பிரிவும் அமைக்கப்பட்டிருந்தது. பிரேமதாசாவின் விருப்பத்திற்கு மாறான இந்தப் படைப் பிரிவு புலிகளுக்கு எதிரானது என்று புலிகளை உசுப்பேத்தி இவ் பொலிஸ் படைக்கு எதிரான தாக்குதல்களையும் இதனை இல்லாமல் செய்வதற்குரிய அத்தனை வேலைகளையும் பிரேமதாசா செய்தார். இந்திய இராணுவத்துடனான பகை புலிகளின் கண்ணை மயக்க பிரேமதாசாவின் அரவணைப்பில் திளைத்திருந்த புலிகள் இப்படியான நல்ல விடயங்களையும் இனம் காணத் தவறிவிட்டனர். உருவாக்கப்பட்ட 13 வது சட்ட மூலத்தில் வடக்கு கிழக்கு மகாண அரசின் முதல் அமைச்சரின் ஒப்புதல் இன்றி மகாண அரசைக் கலைக்க முடியாது என்ற சரத்து 13 வது திருத்தச் சட்டத்திற்குள் இருந்தது. ஆனால் இந்த அதிகாரம் பின்பு ஈரோசின் 13 எம்பிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் பிரேமதாசாவால் தந்திரமாக நீக்கப்பட்டது. பிரேமதாஸ புலிகள் உடனான தேன் நிலவுக் காலத்தில் அவசரம் அவசரமாக 13 வது திருத்தச் சட்டத்தில் மகாண அரசிற்கு இருந்த அதிகாரங்கள் பல பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் மூலம் குறைக்கப்பட்டன. புலிகளுக்கு இந்திய இராணுவத்துடனான பிரச்னைக்கு பிரேமதாசாவின் அரவணைப்பு தேவை என்பதை பிரேமதாசா நன்கு பயன்படுத்தி இந்தச் சட்டத்திருத்தங்களை மேற் கொள்ள புலிகளின் கவனிப்பே இன்றி எதிர்புகள் இன்றி புலிகளின் பினாமி ஈரோஸ் எம்பிகளின் ஆதரவுடன் குறைக்கக் கூடிய அதிகாரங்கள் எல்லாவற்றையும் குறைத்தார்.
Eelapriyan Balan Siva Easwaramoorthy சரி புலிகள் பிரேமதாசா காலத்து தேனிலவையும் அக்காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமாற்றங்களையும் விடுவோம். அதன் பின் மூன்றாவது ஈழப்போர் 1990 யூனில் தொடங்கியதன் பின்னர்தானே வடகிழக்கு மாகாணசபையின் முதுகெலும்பான அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. தமிழர் விடுதலை கூட்டணியினர் இந்தியாவிடம் முறையிட்டும் இந்தியாவினால் அந்த அதிகார பறிப்பிற்கெதிராக எதையும் செய்துவிடமுடியவில்லையே! ஏன்? மாகாண அரசென்பதே இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு இலங்கையின் அதாவது ஸ்ரீலங்காவின் சட்டவரம்பினுள் அமைக்கப்பட்ட ஒன்றுதானே! எப்போதுமே மகாவம்ச மனவமைப்பினுள் இருந்துவரும் சிங்களம் தனது பலம் பராளுமன்றில் இருக்கும்போது எந்தவிதமான சட்டத்தையும் திருத்தலாம் இல்லை நிறைவேற்றலாம். மொத்தத்தில் சிங்கள சட்ட அடிப்படையில் கட்டப்பட்ட தமிழரின் ஆகாசகோட்டைதானே இந்த மாகாணசபை என்பதுவே! இதைவைத்து எதனை சாதிக்கலாம் என்கின்றீர்கள்?
Siva Easwaramoorthy இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பு முக்கியமானது. இது ஒருவகையில் விடுதலை அமைப்புக்களின் ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் என்பனவற்றிற்கு அப்பால் இந்திய அரசால் உருவாக்கப்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதே உண்மை. ஓரளவிற்கு நியாயமான இந்திய மொடலுக்குரிய மாநிலங்களுக்குரிய அதிகார வரம்பு வரை காலப் போக்கில் தள்ளிச் செல்வதே இந்தியாவின் விருப்பாக இருந்தது. கவனிக்க இந்திய மாநிலங்களுக்கான அதிகார வரையறை மட்டும் இதற்கு மேல் அல்ல. தனி நாடு ஏற்படுவதைத் தவிரிப்பதற்கு (இதனை இந்தியா விரும்பவில்லை என்பது வெள்ளிடை மலை) இந்த ஒரு பொறி முறையை இந்தியா கையாண்டது என்பதுவும் என்பார்வை. இது தமிழருக்கு கிடைக்கவிருந்த அதிகாரப் பகிர்விற்கான ஆரம்ப புள்ளியே. அல்லது அவ்வாறு நாம் கையாண்டு இருக்க வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் சட்ட மூலம் ஆக்கபட்ட விடயமும் கூட. இதில் இலங்கை தரப்பு ஜே.ஆர் தனது இராஜதந்திரம் (இதனைக் குள்ள நரித்தனம் என்று கூறுவதே சரியானது) மூலம் இந்தியாவை இலங்கைத் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற கருத்தியலை புலிகளினூடு செயற்படுத்தி வெற்றி கண்டார் என்பதில் தமிழ்தரப்பின் இராஜதந்திரம் புலிகளின் குறும் பார்வையூடாக தகர்க்கப்பட்டுவிட்டது. தமிழ் மக்களும் தங்கத் தாம்பாள தனிநாட்டுக் கனவில் இதனை பகுத்தாய்வு செய்துபார்க்கத் தவறிவிட்டனர். ராஜீவ் காந்திக்கு இராணுவ அணிவகுப்பில் ஏற்பட்ட அவமானமும். பிரேமதாசாவின் அமைதிப்படையை ஆக்கிரமிப்புப் படை என்று மாற்றி இறுதியில் இந்தியப்படை என்று மாற்றம் அடையச் செய்து இறுதியில் இது வெளியேற்றப்படவேண்டும் என்ற கோஷத்தை தலதா மாளிகையின் வழிபாட்டின் பின்பு பிரகடனப்படுத்தியது; உருவான வடக்கு கிழக்கு மாகாசபையை இயங்குவதற்கு எல்லாவகையிலும் முட்டுக்கட்டை போட்டது (சிறப்பாக சட்ட மூலத்திலிருந்த 40 வீத வரி(வடக்கு கிழக்கில் சேகரிக்கப்படும்) யை வடக்கு கிழக்கிற்கு வழங்குதல்) போன்ற விடயங்களால் இருநாட்டுத் தலைவர்கள் என்பதற்கு அப்பால் பிரேமதாசாவிற்கு தனிப்பட்ட பாடம் கற்பித்தல்(இது இவரின் தயார் இந்திராகாந்தியிடமும் இருந்தது. ஜேஆர் இன் அமெரிக்க உறவும் இலங்கையில் அமெரிக்காவின் தொடர்பு சாதன பொருத்துதலில் இந்தியாவின் விருப்பை மீறிய செயற்பாடுகள்) என்ற நிலையிற்கு ராஜிவ் தள்ளப்பட்டிருந்தார் என்பதை இவருடன் நேரடியாக பழகிய விடுதலை அமைப்புத் தலைவர்கள் அறிந்திருந்தனர். (இது பற்றி அண்மையில் யாழ்ப்பாணத்தில் றிம்மர் மண்டபத்தில் நடைபெற்ற தோழமை தினம் கூட்டத்தில் சித்தார்த்தன் பேசியும் இருந்தார்).அமரர் பத்மநாபாவுடன் மிகவும் நெருங்கிய உறவில் இருந்த ராஜீவ் காந்தி இவரிடமும் அதிகாரகப்பரவலாக்கல் தோற்கும் இடத்து அல்லது வடக்கு கிழக்கு பிரக்கப்படும் செற்பாட்டை இலங்கை அரசு மேற்கொண்டால் போன்ற சிறப்பு சூழலில் தனியாக பிரிந்து செல்வதற்கான விடயத்திறது ஆதரவு அளிப்பது என்ற கருத்தியலை வெளிப்படுத்தியிருந்தார் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிவர்.
Siva Easwaramoorthy இதனால் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரம் வழங்கப்படாமல் தடுக்கும் பிரேமதாசாவிற்கு பாடம் கற்பிக்கும் செயற்பாடாக முதல்கட்டமாக இந்த மகாண சபையை சட்டம் இயற்றும் ஒரு சபையாக பரிணாமம் அடையச் செய்து [இவ்வகையான ஒரு செயற்பாட்டைக் கிட்டத்தட்ட அன்றைய இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தன்னக்தே உருவாக்கிச் செயற்படுத்திக் கொண்டிருந்தது( அதாவது ஒரு அரசுக்குரிய தனி அரசுக்குரிய அதிகாரங்களில் முக்கியமான செயற்பாட்டை)] இதற்கும் மசியாத இடத்து தவிர்க முடியாமல் தனிநாடாக பிரகடனப்படுத்தல் என்ற சூழலுக்குள் தள்ளுவதும் ராஜீவின் பிரேமதாசா மீதான வஞ்சம் தீர்க்கும் விருப்பாக இருந்தது (கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா….?. இதற்கு அவர் ஆட்சியில் அமரவேண்டிய தேவை (இது சாத்தியம் ஆகியிருக்கும் புலிகளால் இவர் கொல்லப்படாவிட்டால்) இருந்தது. இந்த நிலை ஏற்படும் போது புலிகளையும், ஈபி ஆர்எல்எவ் ஐயும் பகை அணிகளாக இல்லாமல் சினேக அணிகளாக மாற்றும் செயற்பாடுகள் தமிழ் நாட்டு முதல் அமைச்சர் மூலம் மேற்கொள்ளப்பட்டும் இருந்தன. இவை எல்லாம் திரை மறைவு விளையாட்டுக்கள். இதனை பிரேமதாசா நிச்சயம் விரும்பியிருக்கமாட்டார். அமெரிக்காவுடன் மிக நல்ல உறவில் இருந்த பிரேமதாச இதற்கான தடை உத்தரவை அமெரிக்க செயல்வடிவத்தினூடு செய்வதற்கு நிச்சயம் அணுகி இருப்பார். இதற்கான கருவியாக புலிகளை பாவித்து ராஜீவை இல்லாமல் செய்தல் என்ற செயல் வடிவத்திற்கு ஊடாக நிறைவேற்ற முயன்று இருக்கலாம் இதற்கான பழிவாங்கும் வெறியும் புலிகளிடம் இருந்தது வாய்பாக அமைந்துவிட்டது. இதில் புலிகள் தமது சுய முடிவின்படி செயற்பாட்டை முந்திக் கொண்டு செய்தார்களா? அல்லது மறைமுக உந்துதலால் செய்தார்களா? என்பதை சம்மந்தப்பட்ட யாராவது வாய்திறந்தாலே தெரியவரும். இதில் தொடர்பாடலுக்கான சுவாமியின் பங்கும் இங்கு கவனிக்கத்தக்கது. ராஜீவின் மரணம் தவிர்கப்பட்டிருந்தால் இந்திய மாடல் வடிவிலான அதிகாரம் மிக்க மாநில அரசாக வடக்கு கிழக்கு தமிழ் மாநில அரசு மிளிர்ந்திருக்கும் அல்லது இந்தியாவிற்கு வங்கம் கொடுத்த பாடம் என்பதை பாடமாக எடுத்து ஈழம் அமைந்திருக்கும். பங்களாதேஷ் அமைந்த வங்கம் தந்த பாடத்தில் சந்ததியாரின் பார்வை எமது தேசத்திற்கும் அன்றை காலகட்ட பூகோள அரசியல் நிமைக்கும் ஏற்பவே நாம் பார்க்கவேண்டும். வெறுமனவே பழைய அனுபவங்களை எங்களுக்கு பொருத்திப்பார்க்க முடியாது. இது உண்மையில் புலிகளின் சரித்திர ஆய்வாளர் திருநாவுக்கரசின் அகண்ட இந்தியக் கனவு, பங்காளதேஷ் என்ற இந்திய வெறுப்பு வாதத்திலிருந்து உருவானதே. யாழ்பல்கலைக் கழக சூழலில் அன்றைய காலகட்டதிலிருந்தவர்களுக்கு இது தெரியும். இந்த விஷமத்தனமான வெறுப்புப் பிரச்சாரமே புலிகளிடம் எங்கும் வியாபிக்கப்பட்டு குறைந்த பட்டசம் அயல்நாடான இந்தியாவுடன் நட்பு முரண்பாட்டை உருவாக்காவிட்டாலும் பரவாய் இல்லை பகை முரண்பாட்டை உருவாக்கக் கூடாது இது ஈழவிடுதலைப் போராட்டதின் வெற்றிக்கு உறுதுணையாக அமையாது என்பது உருவாக்க முடியாமல் செய்துவிட்டது. இந்திய விருப்புவாதம் இல்லாவிட்டாலும் பரவாய் இல்லை இந்திய வெறுப்புவாதம் இந்திய உபகண்டத்தில் எம்மை இல்லாமல் செய்துவிடும் என்ற யதார்த்தத்தை நாம் உணர வேண்டும். வங்கம் தந்த பாடம் என்ற கருத்துரவாக்கம் வெறும் பரச்சாரக் கோஷம் என்றே என்னால் பார்க்கப்படுகின்றது. இது இராஜதந்திரமற்ற இந்தியா மீதான வெறுப்பை ஏற்படுத்தும் ஒரு வகைப் பிரச்சாரம். போராட்டத்திற்கான பின்புலமாக (இன்றுவரை?) இந்தியாவின் தயவைநாடி நிற்கும் நாங்கள் இந்தியாவுடனாக உறவை பகை முரண்பாடாக கொண்டிருத்தல் எவ்வகையில் எமக்கு உதவியிருக்கும் என்பது ஆய்விற்குரியதே(இது உண்மைகளைக் கண்டறிவதற்கான பதிவே ஒழிய இல்லாததை நிறுவுவதற்கான பதிவு அல்ல.) – Siva Easwaramoorthy