உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.

மறைந்து 14 ஆண்டுகள்!!
தோழர் உமாகாந்தன் எமது ஈழமக்கள் பாரம்பரியத்தின் சர்வதேசியவாதி.
உலகளவிய பார்வையுடன் இலங்கை ஈழதேசிய வர்க்க சமூக விடுதலைப்போராட்டத்தை அணுகியவர்
1980கள் 90களின் புலம் பெயர் அரசியல் இலக்கிய சூழலில் தோழர் உமாகாந்தன் மிக முக்கிய ஆளுமை.
அவரது ஆளுமையின் தாக்கத்துடனான பிரான்சுப் பாரம்பரியம் இன்றளவில் நிலவுகிறது.
பாரதியைப் போல் குறுகிய காலம்தான் இவ்வுலகில் அவர் வாழ்ந்திருந்தாலும் வரலாற்றில் அவரது தடங்கள் அழுத்தமானவை.
ஜனநாயக இடைவெளி அரித்தழிக்கப்பட்ட மிக அபாயகரமான நாட்களில் ஜனநாயகத்தின் பதாகைகளை உயர்த்திப்பிடித்தபடி கம்பீரமாக பாரிஸ்வீதிகளில் உலாவந்தவர்.
தனது குறுகிய கால வாழ்க்கையை ஈழமக்களின் விடிவிற்காகவும் புலம்பெயர் முற்போக்கு அரசியல் இலக்கியத்திற்காகவும் உறவுக்காகவும் சர்வதேச சகோதரத்திற்காகவும் அர்ப்பணித்தவர்.
அவரது வாழ்வும் மரணமும் விரிவாக பதிவு செய்யப்பட வேண்டும்.
பாரதியின் வார்த்தைகளில் ஒளிபடைத்த கண்களும் உறுதிகொண்ட நெஞ்சுமாக .
வடமராட்சி மண்ணில் பிறந்து உலக மானிடனாக ,வாழ்ந்து மறைந்தவர்
தடம்பதித்து மறைந்த பலதோழர்களின் உறவுகள் பெற்றோர் உற்றோர் பெருமைக்குரியவர்கள்.
பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வாழ்ந்த வீடுகளிருந்த இடங்களின் நிசப்தம் மனதை நெருடுகிறது.
இந்த தோழாகள் தமது குடும்பங்களுக்கோ உற்ற சுற்றத்திற்கோ எதுவும் செய்யாமல் சமூகவிடுதலையை மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர்கள்.
தோழர் உமாகாந்தனும் அவ்வாறுதான் .
1990களின் இறுதிப்பகுதி என்று நினைக்கிறேன்.
எமது கண்ணோட்டதின் ஒரு இதழில் எழுதியிருந்த சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சிறு குறிப்புக்களை தொலை பேசியில் பாராட்டியது என் ஞாபக அடுக்குகளில்.
உமாகாந்தன் எம் தோழர் . எமது பெருமிதம்
.

(தோழர் சுகு)