உருக்குலைந்துள்ள மாகாணசபை நிமிர்ந்திட உருப்படியான சிந்தனையும் செயல்களும் வேண்டும்

(அ. வரதராஜா பெருமாள்)

இந்தியாவும் ஜெனீவாவும் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகின்றன. இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் வல்லமையான ஒரு சிலர் மாகாணசபை அமைப்பு முறையை இல்லாதொழித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். இருந்தாலும் அரசாங்கம் அதனை செய்யமாட்டாது என்றே கருத முடிகிறது. – சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை சமாளிக்க மாகாண சபையை இப்போதுள்ள நிலையிலேயே வைத்துக் கொண்டு சமாளிப்பார்கள் என்றே அனுமானிக்க முடிகிறது.