உலகில் ஏற்பட்டுவரும் ஜனநாயக பன்முகத்தன்மை மறுப்பு

(சாகரன்)

உலக அரசியலில் மூன்று விடயங்கள் என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்துள்ளது. உலகம் மீண்டும் ஒரு உலக யுத்தத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இனவெறி, நிறவெறி, தனிமனித அல்லது தனிக்குழு ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை நிறுவ முயன்று 2ம் உலகப் போருக்கு காரணமான ஹிட்லரின் நாஜி ஒத்த செயற்பாடுகளை வளர்த்தெடுத்து உலகத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ..? என்ற எண்ணத் தோன்றுகின்றது. அவையாவன:1. அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் சார்லட்வில்லில், சமத்துவத்தையும் சமூகநீதியையும் வேண்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, வெள்ளை நிறவெறிக் கும்பல் நிகழ்த்திய மூர்க்கத்தனமான தாக்குதல். இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து, பொலிஸார் திருப்பி அழைக்கப்பட்டனர். இவற்றிற்கு ஆதரவான அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சு.

2. மாற்றுக்கட்சியினர், காங்கிரஸ் எதிர்தாலும் தன் இஷ்டத்திற்கு அமெரிக்க மெக்சிகோ இடையே மதிலை அமைத்தல் என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்றம் இன் பேச்சு.

3. ஆப்பானிஸ்தானில் தொடர்ந்தும் அமெரிக்க படைகளை நிறுத்திவைத்திருந்து போரைத் தொடருதல் என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்றம் இன் அறிவித்தல்.
 
4. மன்னராட்சிக்கு எதிரான கட்டார் மீது அமெரிக்க கூட்டாளி மத்திதரகடல் நாடுகள் மன்னராட்சி சவூதி அரேபியா தலமையில் பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல் என்று குற்றம் சாட்டி தடைகளை விதித்தல்.