உழைப்பாளர் தினம்: மனித இயலுமையிற்குள் உழைப்பில் ஈடுபட போராடுவோம்!

குடும்பத்தில் ஒருவர் பொருள் ஈட்டலுக்கான உழைப்பில் ஈடுபட மற்றவர் குடும்பத்தை பராமரிக்கும் உழைப்பிலும் ஈடுபட்டு சந்தோஷங்களை கண்டு வந்ததே மனித குல வரலாறாக இருந்து வந்தது. இதில் நிறைவான வாழ்வையும் அதனையொட்டிய சந்தோஷங்களையும் கண்டு வந்தது மனித குலம். இன்று குடும்பத்தில் இருவரும் பொருள் தேடலுக்காக ஓட்டத்திற்கு தள்ளிய மோசமான சுரண்டலை முதலாளித்தும் செய்து இன்று அது வளர்சியடைந்த நிலையில் இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக குடும்பத்தை பராமரிக்க மனித இயலுமைக்குள் முடியாத உழைப்பில் மனிதர்களைத் தள்ளிய யுகத்தில் நாம் இன்று நிற்கின்றோம்.


‘வசதியான’ வாழ்வை வாழவேண்டின் மனிதன் 40 மணிநேரத்திற்கு மேல் உழைப்பில் ஈடுபடவேண்டும் என்று படுகுழிக்குள் தள்ளப்பட்டு மனித இயலுமைக்கு முடியாத உழைப்பில் வலிந்து வீழ்த்தி எக்காளமிட்டு சிரித்து நிற்கும் முதலாளி வர்க்கம் பிறர் உழைப்பைச் சுரண்டி களவாடியக் கண்ட இலாபத்தில் கோபுரங்கள் கட்டிக் கொண்டாடுகின்றது. அதே வேளை உழைக்கும் மக்கள் இயலுமைக்கு கூடிய உழைப்பிற்குள் வீழ்த்தப்பட்டு நோய்களுக்கும் உள்பட்டு குடுபத்துடனும் இன்ன பிற சமூக நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்த முடியாமல் இயந்திரங்களில் ஒன்றாக்கப்பட்டுள்ளனர்.

முதவாளி வர்க்கம் தனது உபரி உற்பத்தியை உழைக்கும் சாமன்ய மக்களுக்கு விற்கும் தந்திரோபாயத்திற்குள் வீழ்த்தி மனிதன் தன்னிலை அறியாது இன்னும் இன்னும் என்று தேவைக்கு அதிகமான ஆடம்பரங்களுக்கள் மூழ்கப்பட்டிருக்கின்றான். இதற்கு தேவையான விளம்பர உத்திகளை இதே முதலாளிவர்கம் தனது கவர்சிகரமான ஊடகங்கள் ஊடு செய்துவருகின்றன. இதில் பெண்களைப் போகப் பொருளாக காட்டி ஒழுக்கமற்ற சமூகத்தை உருவாக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டும் வருகின்றது. அழகியல் என்பது மனிதனை குறிப்பாக பெண்களைப் பண்டப் பொருளாக்கி காட்டுதல் என்ற வரையறைக்குள் குறுக்கி போதையூட்டும் வெறிச் செயலையும் காட்சி ஊடகங்கள் ஊடு செய்தும் வருகின்றன.

இளம் தலைமுறையினரின் சீரழிந்து போகும் போகச் சிந்தனைகளை உருவாக்குவதில் இந்த காட்சி ஊடகங்கள் கணிசமான வேலைகளை செய்தும் வருகின்றனர் இதிலிருந்து எமது இளம் சந்ததியினரை மீட்க நாம் இந்த உழைப்பாளர் தினத்தில் சபதம் எடுப்போம்.
உலகின் ஒரு மூலையில் ஒரு வேளை உணவு கிடைக்காத வாழ்கை முறையிற்குள் தள்ளப்பட்ட மனித குலம் மறு முனையில் உபரி உற்பத்தி உணவை உள்கொண்டும,; வெளியில் கொட்டியும் அநியாப்படுத்தும் ஆடம்பர விருந்துகளை நடாத்தி பணம் பண்ணும் வேலையில் வியாபாரிகள் ஈடுபடுகின்றனர். வீணாக்கப்படும் உணவு சரியான முறையில் பகிரப்படும் முறமைகள் உருவாக்கப்பட்டால் உலகில் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது பலருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகின்றது.

உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தும் ஏகபோகங்கள் உபரிகளை (உணவு) உற்பத்திகளை பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கி உணவும் பண்டங்களின் விலைகளை சமான்ய மக்கள் வாங்கமுடியாத அளவிற்கு உயர்த்தி விட்டனர். இது முதல்தர நாடுகளில் இருந்து மூன்றாம்தர நாடுகள் என்று அழைக்கப்படும் எங்கும் இன்று இது வியாவித்திருக்கின்றது உணவை அளவாக சமமாக பகரும் முறமைகளை எற்படுத்து போராடுவோம் என்ற உறுதி பூண்போம். இயற்கை களம் நீரை போத்தல்களில் அடைத்து காசு பண்ணும் களவாணித்தனம் இன்று செயற்கை குடிநீர்வரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றது இந்நிலமை தொடரந்தால் எதிர்காலத்தில் பிராணவாயுவையும் சாசு கொடுத்து சுவாசிக்கும் நிலை ஏற்பட மாட்டாது என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. இது வெறும் எழுத்திற்காக சொல்லப்படும் எச்சரிகை மட்டும் அல்ல. வலுவான எச்சரிகை மணியாகும்.

எனவே இந்த உழைப்பாளர் தினத்தில் மனித குலத்தை மோசமான சுரண்டல் வாழ்கையில் இருந்து மீண்டெடுத்து நியாயமான நிறைவான மகிழ்சிகரமான வாழ்வை உறுதி செய்ய உழைக்கும் மக்கள் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.