எங்களுக்கென்ன இதெல்லாம் புதுசா? – துப்புரவுப் பணியாளர்களின் குரல்

(நந்தினி வெள்ளைச்சாமி)

ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் “இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்” என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம்.