என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, PLOT, EPRLF, TELO ஆகியவை உள்ளன. இவற்றின் சி்ன்னம் வீடு. இது அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சி்ன்னம். தமிழ் மக்கள் பேரவையில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், PLOT, EPRLF, TELO இணக்கமாக உள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் முக்கியமான தரப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சி்ன்னம் சைக்கிள். இது அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் சின்னம். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டவர்கள் அந்தச் சின்னத்துக்குரிய கட்சியைத் தனித்து விட்டு தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வுக்குப் பயணம். தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிகழ்வில் பங்கேற்பு.

ஈபிடிபி இன் சின்னம் வீணை. இவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைபினருக்கும் ஒவ்வாது இதில் அங்கம் வகிக்கும் சுரேஷைக் கண்டால் இவர்களுக்கு கறாம் ஆனால் இவர்களும் இந்த எழுக தமிழில் இணைந்துள்ளனர் என்னதான் நடக்கின்றது
(கருணாகரன் – சாகரன்)