என் பார்வையில் இந்தக்கொலைகள்

நான் எனது பதிவுகளில் அடிக்கடி நினைவூட்டுவது என்னவென்றால், விடுதலை போராட்டத்தில் போராடி இறந்தவர்களையும்,
தற்போது போராட்டத்தை விட்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் ஒதுங்கி இருப்போர்களையும்,
புனர்வாழ்வு பெற்று இருப்போரையும் மதிக்கிறேன், அவர்களில் சிலர் ஆரம்பகால அடிமட்ட போராளிகளிகளாக
இருந்தவர்கள்,பெரும் தலைமை பொறுப்புகளில்,இருந்தவர்கள், டிரைவர் ஆக இருந்தவர்கள், புலனாய்வுத்துறையில் இருந்தவர்கள், காவல்துறையில் இருந்தவர்கள்,காவல் துறை தலைமை அதிகாரியாக இருந்தவர்கள், ஏரியா பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்,
பெரிய தளபதிகளுக்கு பாதுகாவலர்களாக
இருந்தவர்கள் , அனுராதபுரத்தில் விகாரையில் சுட்டு பிக்குகளையும் பொதுமக்களையும் கொன்றவர்கள்,சகோதர அமைப்புகளை கொலை செத்தவர்கள் என இன்னும் பெயர் குறிப்பிட முடியாத நல்ல நண்பர்கள் எனது முகப்புத்தகத்தில் இருக்கிறார்கள்,
ஆனால் இந்த புலிவாலுகளையும் , புலி பினாமிகளையும்தான் அடியோடு வெறுக்கிறேன்.இந்த புலிவாலுகளான முகநூலுக்கு பிறந்த முகநூல் போராளிகளுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் இனியும் எனது இன்போக்ஸ்சுக்குள் சொந்த ஐடியில் வரப்பயந்து கள்ள ஐடியில் வந்து எனக்கு மெசேஜ் பண்ணுவீர்களாக இருந்தால் , உங்களுக்க தலையில் கோடாலிக்கொத்து தான்.இது உங்களுக்கு எனது கடைசி எச்சரிக்கை. இதன் பின்னரும் வந்து இதை ஏன் 2009 இற்கு முன்னர் கேட்கவில்லை என்று யாராவது கேட்பீர்களாக இருந்தால் , அவர்களுக்கு எனக்கான பதில் ,அவர்களுக்கு என்னை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் இந்த புலிவாலுகளை அப்போதே இதைவிட மோசமாக விமர்சித்தவன்,
என்னுடன் லண்டனில் 25 வருடத்துக்கு மேலாக நண்பர்களாக இருந்த பலர் என்னுடன் இப்போதும் நெருங்கிய நண்பர்களாக
உள்ளனர், அவர்களிடம் என்னை பற்றி கேட்டு அறிந்து கொள்ளவும்.

35 ஆண்டுகளுக்குமுன் ஓரு சம்பவம் நடைபெற்றது அதனை அவரது சகோதரன் இன்று நினைவு கூறுகிறார்.

August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு பிரபாகரனால் திட்டமிட்டு வஞ்சமாக ஆள்வைத்து கொலைசெய்யப்பட்டார் #ஓபரோய் #தேவன் என்கிற இராணுவ திறமைகள் நிரம்பிய போராளி. Godfather படப்பாணியில் 1983 ஜூலை தாக்குதலுக்குபின் தனக்கு போட்டியாக வரக்கூடியவர்களை பிரபாகரன் (#செல்லக்கிளி அம்மான் உட்பட) குறுகிய காலத்துக்குள் கொன்றார். இன்று அவரின் சின்னத்தம்பி தயா லண்டனில் இருந்து இப்படி நினைவுகூருகிறார்.

“என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்”
புலிகளினால் August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு யாழ் நீராவியடியில் சுடப்பட்டு இறக்க முன்னர் 25 வயது நிரம்பிய ஒபரேய் (பறுவா) தேவன் கூறியது. நிறுத்தினார்களா இல்லையே… அந்தக் கூற்று இன்று எவ்வளவு நிதர்சனமாகியிருக்கின்றது, அண்ணனை கொன்ற தம்பியால் அமைதியாய் இருக்கமுடியுமா?சொந்த தம்பியால் இதை வாழ்நாள் முழுக்க மறக்க முடியுமா?

இன்னுமொரு சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர். மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)

28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

31- எம். கமர்தீன் -(12 வயது)

32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)

34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

38- எம். எஸ். பைசல்-(13 வயது)

39- எம். பீ ஜவாத்- (13 வயது)

40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

42- எச். எம். பௌசர்-(14 வயது)

43- ஏ. ஜௌபர்- (14 வயது)

44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

45- ஏ. சமீம்- (14 வயது)

46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)

47- எம். எம். எம். பைசல் -(15 வயது)

48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்

மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா? புலி வாலுகளே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் புலிகள் 1990 இலே 50 மேற்பட்ட பாலச்சந்திரனை கொன்றுள்ளார்கள்.
இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் ஒரு படத்தினை பிடித்து போராட முடியும்?

இதனை படித்து முடித்த பின்னர்
உனக்கு தெரியாது, இஸ்லாமியர் எல்லோரும் துரோகிகள், இந்தியபடைக்கு தகவல் சொன்னவர்கள் அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று யாராவது கேட்பார்களாக இருந்தால், அவர்களுக்கான பதில், அப்படி நடந்திருந்தால் கூட. இவர்கள் அனைத்து முஸ்லீம் சகோதரர்களையும் இப்படி எவ்வாறுவடக்கில் இருந்து துரதியடிக்க முடியும்?

03 08 1990 இல் நடை பெற்ற கொலைகளுக்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பு கோரவில்லை, அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற ,ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது.ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தை கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார இஸ்லாமிய சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது.

1983ல் கொழும்பில் தமிழரை சிங்களவன்
அடித்து கொன்றதற்கும், 1990ல் புலிகள் இஸ்லாமியரை கொன்று விரட்டி தமிழர் தூய்மை செய்ததற்கும் என்ன வித்தியாசம்?

சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், இந்த புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

* இன்று சகோதர யுத்தத்தை நடத்துவோரை நீங்கள் தேடி அழிக்க வேண்டியதில்லை அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள்.
பத்மநாபா 1987

* நாம் மரணத்தை கண்டு அஞ்சவில்லை ஒரு அடிமையாய் அனாதையாய்
தெருக்களில் மரணித்துப் போவதைத்தான் வெறுக்கிறோம்.
பத்மநாபா 1987.