என் மனவலையிலிருந்து……!

(சாகரன்)

கம்யூட்டர் வைரஸ்: மனிதனை  தோற்கடிக்குமா…? மனிதனால் உருவான மெ(வ)ன் மூளை…!

வழமையாக வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுவது வழக்கம். இதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. இந்த தடவை ரஷ்ய நிறுவனங்களின் கணனிகள் பெருமளவில் இந்த வைரஸ் என்ற மென்பொருள் ஆயுதத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. அதனாலும் இதற்கான கிரிமினல்கள் அமெரிக்காவில் இருந்தே இயங்கலாம் என்று நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அனைத்தும் இணையவலைப் பின்னலுக்குள் அடங்குகின்றன. இது கிரிமினல்களுக்கும் வாய்ப்பாகிவிடுகிறது.

வைரஸ் தொற்று காரணமாக, பிரித்தானிய மருத்துவமனைகள் இயங்க முடியவில்லை. மருத்துவர்களின் கணனிகளை திறக்க முடியவில்லை. அறுவைச் சிகிச்சைகள் நடக்கவில்லை. நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க முடியவில்லை. பிரான்ஸில் ரெனோல்ட் தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தப்பட்டது. கனடாவின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் சுய விபரக் கோவை திருடப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வருகின்றன. இவை எல்லாம் பாரதூரமான விளைவுகள் அல்ல? இருப்பினும் கிரிமினல்கள் நினைத்தால் மென்பொருள் தாக்குதல் மூலம் அழிவுகளை உண்டாக்கலாம் என்பது அதிர்ச்சியானது. இன்று எல்லாம் கணணி மயம் எதிலும் கணணியின் கரங்கள் இருக்கின்றன.

உலகம் எங்கும் பரவி வரும் கணணிகளுக்குள்  புகுந்து தாக்கும் மென் பொருள் ஆயுதம் பற்றி இன்று ரஷ்யாவின் செஸ் சம்பியன் ஹரி ஹஸ்பரோவ் (Garry Kasparov) இடம் கேள்வியொன்று கனடாவின் பிரபல ரேடியோ நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இந்த மென் பொருள் ஆயுதத் தாக்குதலுக்கான  குற்றச்சாட்டு முழுவதையும் ரஷ்யா மீது அவர் தெரிவித்திருந்தார். மேலும்  அமெரிக்க ஜனாதிபதியின் தற்போதைய செயற்பாட்டை ஜனநாயகத்தின் செயற்பாடாக புகழ்ந்தும் இருந்தார்.

அவரை இந்த நிகழ்ச்சியில் இணைத்துக் கொண்டதற்கான காரணம் மனிதர்களால் வெல்லப்பட முடியாத இவரை 1997 இல் கணணியினால் செஸ் போட்டியில் தோற்கடித்தனர். ஐபிஏம் இன் இந்த புளு சிறப்புக் கம்யயூட்டரே (IBM supercomputer Deep Blue) இவரை தோற்கடித்த முதல் செயற்கை மூளை ஆகும். அடுத்த சுற்றில் இந்த சிறப்பு கம்யூட்டரையும் இவர் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். இவர் கம்யூட்டரால் தோற்கடிக்கப்பட்போது உலகமே இவரின் தோல்வியிற்காக கண் கலங்கியது… வருந்தியது… இவர் அதனையும் விட வருந்தினார். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரம் ஒரு ஒரு சிறப்பு மனித மூளையையே தோற்கடித்துவிட்டது என்று நானும் அற்று கவலைப்பட்டேன். அவரின் பக்கம் நின்று அவர் வெல்லவேண்டும் என்று எனக்குள் ஆதரவு வழங்கினேன். அன்று அவர் தோற்றது உண்மையில் தோல்வியல்ல…….?

இன்று வானொலியில் மென் பொருள் ஆயுதத் தாக்குதலுக்கு அவர் கொடுத்த பதிலே அவரின் உண்மையான தோல்வியாக நான் கருதுகின்றேன். (பிற்குறிப்பு: ஆரம்ப காலத்தில் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிராந்தியத் மத்திய கமிட்டி உறுப்பினராக செயற்பட்டார். அதிலிருந்து மெல்ல விலகி ரஷ்யா நாஜி ஹிட்லரின் செயற்பாட்டை ஒத்தது என்று அறிவித்து கம்யூனிசத்திற்கு எதிரான ஜனநாயக இயக்கம் என்று புறப்பட்டு இன்று மனித உரிமைவாதியாக தன்னைக் அடையாளப்படுத்தி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வாழ்ந்து வருகின்றார்)