ஏறு தழுவுதல் – ஆதரவு

நாளை நடைபெறவிருக்கும் கவனயீர்ப்புக்கு ஆதரவளிப்பது பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாள அழிப்புகளுக்கு எதிராக சிந்திக்கத் தொடங்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகிய அறம், நீதி போன்றவற்றை தொடர்ந்தும் காத்துவரும் ஒரு மொழியின் சந்ததிகள் அதன் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும் அதன் வாழ்வு முறைக்கும் ஏற்படும் ஆபத்துக்களைக் கவனத்திற்குட்படுத்த வேண்டும். நமது வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

(கிரிஷாந்)

ஜல்லிக்கட்டு தடையிற்கு பின்னால் ஒழித்திருக்கும் சுதேசியத்தை இல்லாமல் செய்து மேற்கத்திய இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நவகாலணித்துவ சுரண்டலில் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

(Saakaran)

ஆனால் ஜல்லிக்கட்டு தடையை இன அடிப்படையில் பார்ப்பது தவறானது. இது பெரும் நிறுவனங்களின் இலாபங்களை பெருக்குவதற்காக மக்கள் தங்கிவாழ்ந்துவரும் பழைய உற்பத்தி வடிவங்களை,அதாவது மாடுவளர்ப்பு அதன் ஊடாக இடம்பெரும் பால் பரிவர்த்தனை முறையை முற்றாக அழித்து அதனிடத்தில் காப்பிரேட் கம்பனிகளின் பால்களை அறிமுகப்படுத்துவதினை நோக்கமாக கொண்டதுதான் இந்த தடை,இது தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கும் ஆரியர்களின் திட்டமிட்ட நடவடிக்கையாக தாங்கள் பார்ப்பது பிற்போக்கான பார்வையாகும்..உண்மையை திரிப்பதாகும்..இந்த தடைக்கு பின்னால் இருக்கும் வெளிநாட்டு கார்பிரேட்டுகளின் இலாப நோக்கத்தினை பலர் வெளிப்படுத்தியுள்ளார்கள்,அவைகளை படிக்கவும்.vengayangal…உண்மையான வர்க்கப்பிரச்சனையை மறைத்து இனப்பிரச்சனை மொழிப்பிரச்சனையாக்கி அதில் குளிர்காய்வதில் தேசியவாத சுயநல அரசியல் இலாபங்கள் இருக்கின்றன.. (Koovam Kupusamy)