ஐயரும் ஆட்டுக்குட்டியும்

ஒரு இருண்டகாலத்தில், எழுத்துசுதந்திரம் மறுக்கப்படட காலத்தில், துப்பாக்கி எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என எல்லோரும் நம்பிய காலத்தினுள் நாம் சில தொகுப்புகளைக் கொண்டுவந்திருந்தோம், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த எனது நண்பர் , ‘சில தன்னார்வ அமைப்புகள் தமிழில் வெளிவந்த தொகுப்புகளை ஆவணப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன, உங்கள் தொகுப்புகளை அவற்றிற்கு அனுப்பிவையுங்கள்’ என நூலகம் அமைப்பினரது பெயரை எனக்குப் பரிந்துரை செய்தார், நூலகம் அமைப்பினருடன் தொடர்புகொள்ள முயன்றபோது எனக்கு இப்படி ஒரு பதில் வந்தது, நான் அதிர்ச்சியடையவில்லை, நிறையப் பார்த்து விட்டோம் ரொம்பவும் !

அய்யர் நுாலகத்தின் நிர்வாக கட்டமைப்பின் அதிமுக்கிய பங்காளர்களுக்கு காட்டிய வேலைகளினால் அங்கிருந்து வெளியேறி விட்டேன். நான் நிச்சயமாக சொல்வேன். நுாலகத்தினை இன்றுள்ளவாறு முடிங்கிப்போக அய்யரின் தற்பெருமைப்போக்கே காரணம் என்று. எதுவித தகுதியும் இல்லாத, 1 சதமெமேனும் நுாலகத்திற்கு கொடுக்காத இங்கிலாந்தில் வாழ்ந்த தனது சாதியைச் சேர்ந்த ஒருவரை நுாலகத்தின் இயக்குனர் ஆக்குவதற்கு இப்போது ஓடித்திரிகிறார். பொதுவேலைகளுக்கு வரும்போது கபடமற்ற ,சுயநலமற்ற மனம்வேண்டும். அது அய்யரிடம் இல்லை.
(சுகன்)