‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா’

ஐரோப்பாவுடனிணைந்திருப்பது பிரித்தானியாவுக்குப் பல விதத்திலும் பாதுகாப்பாகவிருக்கும் என்பதால்.பிரித்தானியா ‘ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டியுடன்’; இணைவதற்கான கோரிக்கையை 1961ம் ஆண்டு முன்வைத்தபோது,ஆங்கிலேயர்களைப் பிடிக்காத பிரான்ஸ் நாட்டின் தலைவர் சார்ள்ஸ் டி கோல்,பிரித்தானியா தங்களுடன் சேர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரித்தானியாவின் கோரிக்கையை 63லும் 1967லும் நிராகரித்தார்.1969ல் பிரான்ஸ் தலைவர் பதவியிலிருந்த சார்ள்ஸ் டிகோல் இராஜினாமா செய்தபின் நிலைமை மாறியது.
1.1.1973ல்; ஆண்டு பிரித்தானியா, ‘ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டி நாடுகளுடணிணைந்தது .இங்கிலாந்தில் இடதுசாரி பாராளுமன்றவாதியான ரோனி பென் (ஜேரமி கோர்பினின் குரு) போன்ற இடதுசாரித்தலைவர்கள் அதை எதிர்த்தார்கள்.

அதன்பின் நடந்த பல மாற்றங்களுடன் கடந்த 47 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிணையத்தின் மிகவும் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா அங்கம் வகித்தது. ஐந்து நாடுகளுடன் ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றியம்,சோவியத் யூனியனின் பிரிவுக்குப் பின் (1991) கிழக்கு ஐரொப்பிய நாடுகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான ஈயுரொவை 19 நாடுகள் பாவிக்கின்றன.ஐரோப்பாவின் இருபத்தி எட்டு நாடுகள் இணைந்த ஒன்றியம் இன்றிரவு 11 மணிக்கு பிரித்தானியா வெளியேறியபின்(ஐரோப்பிய ஒன்றியத்தின் நள்ளிரவு 12 மணி) 27 நாடுகளின் ஒன்றியமாகச் செயற்படும்.

பிரித்தானியாவின் கொடியை ஐரோப்பிய ஒன்றியம் அவர்களின் செயல் தலைமையகத்திலிருந்து (ப்ரஸல் நகர்)இன்று நள்ளிரவு 12 மணிக்கு இறக்கி வைக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் தேசிய கீதமான பேத்தோவனின் 9வது சிம்பனி இனி ஒரு நாளும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணைவை வெளிப் படுத்தும் பிரித்தானிய வைபவங்களில் ஒலிக்காது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகவிருந்த மிசால் பார்னியே தனது பதவியை விட்டு வெளியேறும்போது,’பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பலவினமானதான ஒன்றியமாகவிருக்கும்’ என்று கடந்த வருடம் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.பிரித்தானியாவின் மிகப் பிரமாண்டமான காலனித்துவ ஆளுமையின் பல தரப்பட்ட துறையின் முன்னேற்றம் மட்டுமல்லாமல் பிரி;த்தானியாவின் நிர்வாகத் திறமையை ஐரோப்பிய ஒன்றியம் மிகவம் மதித்தது.

பிரித்தானிய பிரஜைகள் 52 விகிதமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு 2016ம் ஆண்டு வாக்களித்தவர்கள். அவர்கள் லண்டன் ட்ரவல்கர் சதுக்கத்தில்இன்று நள்ளிரவு பிரமாண்டமான விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருக்கவேண்டுமென்று வாக்களித்த,பிரித்தானிய நாடுகளில் ஒன்றான,ஸ்காட்லாந்து நாட்டு மக்கள் இன்றிரவு மெழுகுவர்த்தி கொளுத்தித் துக்கம் கொண்டாடுகிறார்கள்.ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திலிருந்த பிரித்தானிய 73 அங்கத்தவர்களும் இன்று வெளியேறிவிட்டார்கள்.
இன்னும் பதினொரு மாதங்களுக்கு, ‘பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து’ பிரிவதுபற்றிய விடங்கள் பேசப்படும். அதன்பின் அதாவது 31.12.2020,பிரித்தானியா முற்று முழுதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிடும்.450 million மக்களையுள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான அமைப்பிலிருந்து 64 millon மக்களையுடைய பிரித்தானியா வெளியேறுகிறது.

பிரித்தானியாவின் ஏற்றுமதியில் 49 விகிதம் (1.3 ட்றிலியன்ஸ் பெறுமதி;); ஐரோப்பிய ஒன்றியத்துடன் சம்பந்தப் பட்டது. அவற்றை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பியநாடுகள் ஈடுபடும். இனி ஆரம்பிக்கப்போகும் பேச்சுவார்த்தைகள்.வியாபாரம்,பாதுகாப்பு, விஞ்ஞான ஆய்வுகள்,மட்டுமன்றி வேறுபல விடயங்களையும் ஆய்வு செய்யும். முக்கியமாக, 1.3 கோடி பிரித்தானியர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழ்கிறார்கள். 3 கோடி ஐரோப்பிய பிரஜைகள் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள் 92015ம் ஆண்டுக் கணிப்பு).இவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருக்கும்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின்; சட்டதிட்டங்களை எதிர்த்த பிரித்தானிய மக்களின் வாக்குகளால் பிரித்தானியா தன்னைப் பிரித்துக் கொள்கிறது. பிரித்தானியாவின் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல சட்டதிட்டங்களை(அகதிகளை ஐரோப்பாவில் நிறைப்பது போன்றவை) முழுக்க முழுக்க ஆதரிக்காத,ஹங்கேரி,ஸ்பெயின்,இத்தாலி.கிரேக்கநாடு,போர்சுக்கல் என்ற நாடுகள் தாங்களும் பிரிந்துபோய்த் தங்கள் நாட்டுச் சுயமையை நிலை நாட்டுவார்களா என்பது கேள்விக்குறியாகவிருக்கிறது. ஊலகின் பல நாடுகளில் நடப்பதுபோல்,இந்த ஐரோப்பிய நாடுகளிலும்; ‘ தேசியம்’ என்றபெயரில் பல வலதுசாரித் தேசியவாதிகள் உருவாகுகிறார்கள்.இவர்களுக்கு வெள்ளையினமற்றவர்கள் தங்கள் நாடுகளில் அகதிகளாக ஊடுருவது பிடிக்கவில்லை என்பதைப் பல போராட்டங்கள் மூலம் காட்டிவருகிறார்கள்.

வேற்றினத்தார் தங்கள் நாட்டை நிறைப்பதை விரும்பாத பிரித்தானியர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து விட்டார்கள். மற்றைய 27 நாடுகளும் எப்படித் தங்கள் சுயமையை வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பது போகப்போகத் தெரியும்.