ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட வேண்டும்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பேட்டி

கற்றல் மோசம் என்றாலே அரசுப் பள்ளிகளை நோக்கிக் கை காட்டுவது நம் சமூகத்தின் மோசமான இயல்புகளில் ஒன்றாகிவிட்டது இன்று. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் எண்ணிக்கை அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் கற்றல் திறன் மோசம் என்றே வைத்துக்கொள்வோம். அரசுப் பள்ளிகளின் சூழல் தொடர்பில் ஆசிரியர்களிடம் யாரும் பேசுவதில்லை. அங்கே சூழல் என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரிடம் உரையாடியதிலிருந்து…