கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார்

யாழ் மைய வாதிகளின் தமிழ் இனவாதிகளின் -தமிழ் தேசிய வாதிகளின்- எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை இஸ்லாமிய சோசலிஸ முன்னணியின் யாழ் அங்குரார்ப்பன கூட்டத்தை நடத்த துணை புரிந்தவர்கள் சிறுபான்மை தமிழர்களும் இடதுசாரிகளுமாவார்கள். அவர்களில் பலர் கடாபியின் இலங்கை வருகையை மகிழ்ச்சியாக வரவேற்றனர். அன்று நிலவிய சிறுபாண்மை தமிழர்கள் குறுகிய தமிழ் இனவாதத்துக்கும தேசிய வாதத்துக்கும் அப்பால் மிக துணிகரமாக தேசிய சர்வதேச அரசியல் கருத்தாடல்களை ஊக்குவித்தவர்கள் அதன் மூலம் ஒரு முற்போக்கு அரசியல் களம் சமைத்தவர்கள். அவர்களில் எம்.சி சுப்பிரமணியம் பதியுதீனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார். அது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

கடாபி முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிகு தலைவராக விளங்க வேண்டுமென விரும்பினார், அதுவும் குறிப்பாக முஸ்லிம் உலகின் செல்வாக்கு மிக தலைவராக அறியப்பட்ட கமால் அப்துல் நாசரின் மறைவுக்கு பின்னர் அவரின் இலக்கு தனது அரசியல் குருவான நாசரின் இடத்தை பெறுவதிலே இருந்தது. ஆனாலும் அவரின் இஸ்லாம் தொடர்பான பச்சை புத்தக (Green Book) கருத்துக்கள் அவ்வாறான இலக்கை அடைவதில் முஸ்லிம் உலகுக்குள் பின்னடைவை ஏற்படுத்தின. எனினும் கடாபி சளைக்காது செல்வாக்கு மிகு முஸ்லிம் உலக தலைவர் எனும் தமது இலக்கை அடையும் முயற்சியில் எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் முஸ்லிம் நாடுகள் மட்டுமல்ல முஸ்லிம் முஸ்லிம் அல்லாத நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் உள்ள சமூக சமய நிறுவனங்களுடன் தமது இஸ்லாமிய அழைப்பு சங்கத்தினூடாக தொடர்புகளை ஏற்படுத்தியதுடன் அவர்களுக்கு பொருளாதார உதவிகளையும் மேற்கொண்டார்.
(Bazeer Seyed)