காணாமல் ஆக்கப்பட்டோர்…..

(Sugan Paris)

காணாமல் ஆக்கப்பட்டோர் நிலையும் அவர்கள் கோரிக்கையும் மிகவும் சிக்கலான ஒன்று. திடீரென ஓர் நாளில் எல்லோரும் காணாமற்போனவர்களில்லை. இறுதி யுத்தம் வரை இருந்தவர்கள் பின்னர் காணாமற் போன நிலையில் அவர்கள் பற்றிய பெயர் விபரங்கள் அடங்கிய தொகுப்பு எவரிடமும் இல்லை. உண்மையில் தமிழ் அரசியற் தலைமை( கூட்டமைப்பு )தான் இதில் முழுமையாக ஈடுபட்டிருக்க வேண்டும். காணாமல் போனோர்களுக்கான நிறுவனம் ஒன்றை திறந்து இந்த பத்தாண்டு காலத்தில் அதன் இலக்கை அடைந்திருக்கலாம்.