கிளிநொச்சி மாவட்டம் அது பின்தங்கியே இருக்கின்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவம் பிழைத்ததால் மாவட்டத்தின் கல்வி மிகப் பின்தங்கியிருக்கிறது.

கல்வி நிர்வாகத்தில்மோசமான முறையிலான அரசியல் தலையீடுகளைச் செய்தது –

கல்விக்கான பௌதீக வளத் தேவைகளை உரிய முறையில், உரிய காலத்தில் நிறைவேற்றத் தவறியது –

ஆசிரிய, அதிபர் இடமாற்றங்களில் அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செய்தது –

போன்றவை இதற்குக் காரணங்கள்.

வறுமையிலும் கிளிநொச்சி மாவட்டமே முன்னணியில் இருக்கிறது.

அதாவது கல்வியில் கடைசி நிலையிலும் வறுமையில் முன்னணியிலும் நிற்கிறது கிளிநொச்சி.

வறுமை ஒருசூழலில் வளர்ச்சியடையுமாக இருந்தால் அங்கே முதலில் ஏற்படுவது கல்வியின் வீழ்ச்சியும் கலாச்சாரச் சீரழிவுமே.

2014 க்குப் பிறகு கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்தது 50 பேர் வேலை செய்யக் கூடிய தொழில் மையங்கள் கூட உருவாக்கப்படவில்லை. புதிய தொழில் துறைகள் அறிமுகம் செய்யப்படவில்லை.

2010 தொடக்கம் 2014 வரையில் வீதிப் புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது நிறுவனங்களை நிர்மாணித்தல், வீடமைப்பு, மின்வழங்கல், நீர் வழங்கல், நீர்நிலைகளைப் புரமைப்புச் செய்தல், புகையிரத வீதிப்புனரமைப்பு, பல்கலைக்கழக நிர்மாணம் போன்றவற்றின் மூலம் தொழில்வாய்ப்புகள் இருந்தன.

தற்பொழுது இவை குறைவடைந்துள்ளன.

ஆகவே புதிய தொழில் முயற்சிக்கான ஏது நிலைகளை உருவாக்க வேண்டும். இதைக் குறித்து அரசியல் தலைமைகளும் நிர்வாக அதிகாரிகளும் சிந்திக்க வேணும்.

ஆனால், இது நிகழவேயில்லை.

இதனால் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. குற்றச் செயல்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

போருக்குப் பிந்திய சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியமான உற்பத்தித் துறையாக வளர்ச்சியடைந்திருப்பது கசிப்பு உற்பத்தியும்.

முக்கியமான தொழில் துறையாக காணப்படுவது கசிப்பு விற்பனையே.

நீதிமன்றத் தகவல்களின்படி கசிப்பு உற்பத்தி, கசிப்பு விற்பனை, சட்ட விரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மரம் வெட்டுதல்கள் தொடர்பான குற்றச் செயல்களே அதிகமானவை என்று தெரிவிக்கப்படுகிறது.

(2009 க்குப் பிறகு சட்டவிரோத மணல் அகழ்வும் மரம் வெட்டுதலும் இருந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது).

இவையெல்லாவற்றுக்கும் உச்சிப் பூ வைத்ததைப்போல, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளைப் பொருத்தமற்ற தலைமைகள் கைப்பற்றியிருக்கின்றன.

ஏற்கனவே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சிக் கிளை தன்னுடைய கடமைகளைக் குறைத்துக் கொண்டு, கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உட்சுருங்கி விட்டது.

இனிப் பிரதேச சபைகளும் அப்படியே ஆகி விடும்.

ஆகவே கிளிநொச்சி மாவட்டம் இருண்ட யுகமொன்றை நோக்கியே பயணிக்கிறது.

இதிலிருந்து மீளும் வழிமுறை என்ன என்பதே சிந்திப்போருக்கிருக்கும் கேள்வியாகும்.

(Karunakaran)

———————————————————–

போரினால் அழிக்கப்பட்ட கிளிநொச்சியை விட “வரலாற்றுப் புனிதம்” பேசி அழிக்கும் தரப்பே ஆபத்தானது.
கடந்த வருடம் இதற்கு முந்தைய வருடம் கிளிநொச்சி பயணத்தின் போது இதனை தெளிவாக கண்டேன் அறிவியல் நகரம் என்ற நம்பிக்கை திரும் முன்னெடுப்புகள் இருக்கின்றன் இரணைமடுவின் பனர்நிர்மாணம் நம்பிக்கை திருகின்றது மற்றைய உந்த மாவடத்தையும் விட அதிகளவு உதவிகள் (வெளிநாடுகள். புலம் பெர் உறவுகள் அமைப்புகள் இடம் இருந்து) இங்கு கிடைகப் பெறுகின்றன. ஆனால் ஓட்டை அடைப்பது போன்று இந்த பணம் திட்டமிடல் சரியாக இல்லாமல் விரயமாகுவதாக என்னால் உணரப்படுகின்றது இதற்கு துறைசார் நிபுணத்துவம் உடையவரகளை கொண்டு அமைப்புகள் உருவாக்கி திட்டமிடல் செயற்பாடுகள் செயற்படுதப்படவேண்டும் இதற்கு உள்ளுர் புலம் பெயர் தேசத்து எம்மவரின் துறைசார் நிபுணத்துவங்கள் பயன்படுதப்படவேண்டும் முறையற்றை திறமையற்ற அரசியல் தலமை இங்கு இருப்பது வெள்ளிடை மலையாக இருந்தாலும் இதற்கு அப்பால் உள்ள இடவெளியில் ஈகோவை மறந்து தகுதியானவரகளுடன் இணைந்து ஆலோசனை பெற்று பயணிக்கும் மனநிலை அங்குள்ள சமூக அக்கறையுள்ள செயற்படும் நபர்கள் அமைப்புகளிடம் ஏற்படவேண்டும் எனக்கு என்னவோ இதனை அணுகிச் செயற்படுவதற்கு தடையாக… இல்லை இல்லை வரவேற்பு குறைந்த நிலையில் ஒரு மாய மதில் போடப்பட்டிருப்டிபதாக உணர்கின்றேன். இந்த ஜதார்தங்களை கருணாகரன் போன்றவரகள் உடைக்க செயற்படவேண்டும் இதுவோ சாப்பாட்டு வறுமை கல்வி வறுமை இரண்டையும் இல்லாது ஒழிக்கும் மாறாக கடைசிக்கு மதலாக வருவது என்ற சிந்தனை ஓட்டம் தொடர் முன்னேற்றங்களை தராது என்றும் உங்களுடன் நான்(ம்)

(Saakaran)