கேரளம்: இடதுகூட்டணிவெற்றிசொல்லும்சேதி

(செ.இளவேனில்)

கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறிமாறி ஆட்சிக்கு வருவதுதான் எழுதப்படாதவிதி. 1982-க்குப்பிறகு இப்போதுதான் அங்கு ஆளுங்கட்சி ஆட்சியைத்தக்க வைத்துக் கொண்டுள்ளது. 140 இடங்கள் கொண்ட கேரள சட்ட மன்றத்தில், இடது கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் இடங்கள் 99. இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்துவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபாஜக, இருந்த ஓரிடத்தையும் இழந்துள்ளது.