கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை.