கொரனா காலத்தில்: அரசு இயல், அரிசி இயல், அரசி இயல்.

(சாகரன்)

இந்தப் பேரிடர் காலத்தில் அரசியலை பேசுவதை தவிர்போம் என்ற விரதத்தில்தான் இருந்தேன். அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒருகிணைந்து இந்த பேரிடரை எதிர் கொண்டு வெல்ல வேண்டும் என்பதற்கான ஐக்கியத்தின் ஒரு குறியீடாக செயற்பட நினைத்ததில் தவறுகள் இல்லைதானே.