கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம்……?

கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம் மாணவர்களை சுட்டதால் எப்படி வந்தது.இப்படி எத்தனை சம்பவங்கள் தமிழ்ப் பொலிசாரினால் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டன என்பது தெரியாமல் உளறுகிறார்கள்.தமிழன் சுட்டால் இனவாதம் இல்ல.சிங்களம் பேசுபவர் சுட்டால் இனவாதம்.புலிகள் தெருத்தெருவாகச் சுட்டபோது கொந்தளிக்காத சமூகம் இப்போது கொந்தளிப்பது ஏன்.அரசியல் பிழைப்பு.சமூகத்தை சீரழிப்பது,சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது.என்ன மலிவான அரசியல் சிந்தனை.சட்டத்தை மதிக்காத பல்கலைக் கழக மாணவர்கள் நாளை எப்படி சமூகத்தை கட்டி எழுப்புவார்கள். பொலிசாரின் நடவடிக்கை தவறானது.கண்டுக்க வேண்டியது.சட்டம் நிர்வாகத்துக்கு உட்பட்ட தவறு. மன்னிக்க முடியாதது.ஆனால் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது இனவெறியை ஊக்குவிப்பதும் மன்னிக்க முடியாது.

(Vijaya Baskaran)