சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது

அண்மையில் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் குடியேறிய சிங்கள மக்களுக்கு எதிராக சட்டத்தரணி கேசவன் சயந்தன்( மாகாணசபை உறுப்பினர்) வழக்கு தொடுத்ததாக செய்திகளில் படித்தேன். இந்த வழக்கு சட்டரீதியாக சரியாக இருக்கலாம்.இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களுமே. அவர்கள் அதை செய்யாதது தவறு.

இந்த வழக்கு நீதியை நோக்கியது அல்ல.அரசியலை நோக்கியது. இனவாத ரீதியானது என்பதும் உண்மை.

இதைவிட யாழ்நகர் கரையூர் பாசையூரை அண்மித்த பகுதிகளில் 52 மீனவக் குடும்பங்களை இடத்தை விட்டு வெளியேறுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது என அறிந்தேன்.இந்த உத்தரவை யாழ் புண்ணியவான் என கருதப்படும் நீதிபதியே வழங்கியதாகவும் அறிகிறேன்.அங்கே நீபதிகளுக்கு தங்க வீடுகள் கட்ட அந்த இடம் ஒதுக்கப்பட்டதாம்.

அங்கே பல மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைவிட வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்துக்கப்பட்டுள்ளது. என்ன கொடுமை. அதைவிட அந்த மீனவக் குடும்பங்களை வயலை அண்மித்த பகுதிகளில் குடியிருக்குமாறும் பணித்துள்ளனர். அவர்கள் வள்ளங்கள் வலைகளை எங்கே கொண்டுபோவது?

நீதிபதிகளுக்கு கடற்கரைகளா தேவை. ஏழைகளின் வாழ்விடங்களா தேவை. இந்த நீதிபதிகளுக்கு வீடு கட்ட வேறு இடங்களில் காணிகள் இல்லையா?நீதிபதிகளுக்கு கடற்கரை எதற்கு?

கல்வி அறிவு திருடர்களை உருவாக்குகிறது.சமூகவிரோதிகளை உருவாக்குகிறது.ஏழைகளை கொள்ளை அடிக்கும் கூட்டத்தை வளர்க்கிறது.

இந்த மீனவக்குடும்பங்களை சட்டம் காப்பாற்றுமா? தமிழ், தமிழ்என்று கூவுகிற அரசியல் காப்பாற்றுமா? எங்கே தமிழர்களின் இனப்பற்று? இங்கே பிரபாகரன் வளர்த்த மீனவ சாதிப்ற்றும் காணாமல் போய்விட்டது.

இதைவிட மதுவரி உத்தியோகஸ்தர்களுக்கு மாதம் நீதிமன்ற வழக்குக்குளுக்கு ஆட்கள் தேவை. இதற்காக அப்பாவி சீவல் தொழிலாளர்களை மிரட்டி வழக்குகளை சோடிக்கிறார்கள் என்ற புதிய தகவல்கள் கிடைத்துள்ளன். நீங்கள் எல்லாம் தமிழர்களா? நாய்களே நீங்கள் எல்லாம் தேசிய இனம். பூகேவலம். தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திகிற பிண்சைக்கார கூட்டங்கள்.

சாதிவாதம், இனவாதம், மதவாதம், மொழிவாதம் எல்லாம் ஒரு சிலரின் பிழைப்புக்கே உதவும். எந்த அரசியல்கட்சிகளுக்கும் இந்தக் கொடுமை கண்களுக்கு தெரியவில்லை. தேர்தலின்போது எத்தனை வாக்குகள் இங்கே என்பது மட்டும் தெரியும்.

இங்கே மாண்புமிகுநீதிபதியின் நேர்மை தெரிகிறது. தமிழ் இன பற்று தெரிகிறது. சட்டம் எப்படி வளைக்கபடுகிறது என்பதும்தெரிகிறது. சட்டத்தை காக்கவேண்டிய நீதிபதிக்கும் நீதி மன்றங்களுக்கும் இந்த ஏழை மீனவர்களின் துன்பங்கள் தெரியவில்லை. அவர்களே அநீதி இழைத்தால் எங்கே போவார்கள்.

ஏழைகளுக்கு சட்டம் உதவுவது இல்லை. இங்கே நான்கு சிங்களுடும்பங்கள், இஸ்லாமிய குடும்பங்கள் சேர்ந்து இருந்திருந்தால் இந்த சட்டம் தானாகவே அடங்கியிருக்கும். அல்லது மேட்டுக்குடி வெள்ளாளர் என்றால் சட்டம் ஓடியிருக்கும்.

சட்டம் ஏழைகளுக்கு உதவுவது இல்லை. நீதிகளும் கிடைக்க விடுவது இல்லை

(Vijay Baskaran)