சத்தியாகிரகத்தின் அடையாளம் மகாத்மா காந்தி

(சாகரன்)

மகாத்மா காந்தியின் 150 ஆண்டு விழா உலகெங்கும் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எளிமையின் அடையாளமாகவும், சத்திய சோதனைக்குள் எம்மையே உள்படுத்தி எதிரியை வெற்றி கொள்வது இதற்கு சத்தியாகிரகத்தில் ஈடுபடுதல், இதற்கான மக்களை அணிதிரட்ட நடைபவனியாக மக்களிடம் செல்லல் என்ற பொறிமுறையை கையாண்டவர். சுதேசிய உற்பத்திகளை பாவித்தல் என்பதற்கூடாக ஆக்கிரமிப்பு தயாரிப்புகளை நிராகரித்து வியாபாரம் என்ற வகையில் நாடு பிடித்து காலனி ஆதிக்கத்தை நிறுவியவர்களை செயல் இழக்கச் செய்தல் என்பதை தந்திரோபாயத்தை கையாண்டு வெற்றியும் கண்டவர்.