சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?

(சாகரன்)

ரொம்பவும் வெட்கப்படவேண்டிய விடயம். இந்த சமரசம் தவறுகளை ஒருவகையில் நியாயப்படுத்தி அதனைத் தொடருங்கள் என்று ஏந்த கூச்சமும் இன்றி அனுமதி வழங்கிய சமரசம். ஒரே வர்த்தைச் க்க சேர்ந்த இரு அணியினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு. மக்கள் நலன்களை முழுமையாக பின்தள்ளி தமது இஷ்டத்திற்கு மக்கள் பணங்களை வளங்களை தவறான வழியில் கையாடல் செய்த குற்றங்களை மக்களே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஏதேச்சாகராமான செயற்பாடு. அறம் இங்கு செய்துவிட்டது இதற்கு வேறு மதத் தலைவர்கள் சமரம் வீசி ஆசீர்வாதம் வழங்கிய செயற்பாடுகள் இதற்கு சமரசம் என்று பெயர் வேறு. தூ கேடு கெட்ட செயற்பாடு.

மூன்று வருடங்களாக மக்களுக்காக புலப்படும் வகையில் எந்த செயற்பாடுகளையும் செய்யாத இவர்களின் செயற்பாடுகளை என்னவென்று சொல்வது. தம்மீது குற்றச்சாட்டுகள் மக்கள் பொது மன்றத்தில் ஏற்பட்ட போது தமது ‘தூய்மை’ யை நிரூபிக்க பதவிகளைத் துறந்திருக்க வேண்டும் அமைச்சர் அவை. செய்யவில்லை சரி விசாரணைக் கமிசன் என்று ஒன்று உருவாக்கப்பட்டதும் அவ்வாறு நிச்சயம் செய்திருக்கவேண்டும் சுயமாக. அவர்கள் சுயமாக செய்யாவிடத்து அழுத்தங்கள் மூலம் அவ் நிலமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று நியாயங்களை கூறியவர்களே இவர்கள். நம்பிக்கை தரும் நிகழ்வாக குற்றம் நிரூபிக்கப்படவும் சாட்சியங்கள் போதவில்லை என்றும் இருவர் தப்பிக்க இதன் பின்பாவது அமைச்சர் அவையினர் பெட்டிகளை தூக்கிகொண்டு கழி சாப்பிட தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும் (பின்பு சிறை மீண்டதும் சிறை மீண்ட செம்மல்கள் என்று கவிராயர் காசியானந்தனைக் கொண்டு பாட வைத்திருக்கலாம்…?).

தான் தூய்மையானவன் என்று தலமை அமைச்சர் தன்னை தவறுகளில் இருந்து தனித்துக்காட்ட முற்பட நம்பிக்கையில்லாப் பிரேரணை என்று மறு தரப்பு மிரட்ட எல்லாம் பாகம் ஒன்று இரண்டு மூன்று என்று சிலதினங்கள் நாடகங்கள் அரங்கேறி யாழ்பாணத்திற்குள் இருந்து கொண்டே அதுவும் கூட்டமைப்பிற்குள்ளேயே கடிதப் போக்குவரத்து. கணணி உலகில் ‘பட்டானை’ தட்டினால் கணத்தில் செய்திகள் பறக்கும் காலத்தில் கடிதப் போக்குவரத்தாம் முத்தவர் இருவரிடமும் வாகனம் இல்லையோ….? நேரில் சென்று கதைக்க. சமரசங்கள் சாமரைகள் எல்லாம் வீச விட்டுக் கொடுத்து சமரசம் என்று ஒருவரை ஒருவர் காப்பாற்றும் களவாணி வேலைகள் இவை.

தூ வெட்கமாக இல்லையா உங்களுக்கு…? தீக்குளித்த உங்கள் தூய்மையை நிருபிக்க வேண்டாம் மனச்சாட்சிப்படி(எப்போதுதான் அப்படி செயற்பட்டீர்கள்) நடக்கவும் வேண்டாம். குற்றவாளிகள் இதற்கு தலமை தாங்கிய நானும் இதற்கு காரணமாக இருந்துவிட்டேன் என்று நீதிபதி என்ற பட்டத்திற்கு மதிப்பளித்து அமைச்சர் அவை தலைவர் தலமையில் சகலரும் இராஜினமா செய்யுங்கள். சட்டம் தனது வேலையை செய்யட்டும். அப்படி நீங்கள் செய்யாவிடின் மக்களே உங்கள் போராட்டம் இவர்களுக்கு எதிராகவே முதலில் ஆரம்பியுங்கள். நாம் எவ்வளவு காலம்தான் ‘எம்மவர்..?’ களாலேயே எமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது?

இந்த சமரச உடன்பாட்டிற்கு வலு சேர்க்கும் செயற்பாட்டில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் குழுத் தலைவர்களின் நிலைப்பாடும் நம்பிக்கை தரும் செயற்பாடுகளாக தெரியவில்லை கூட்டமைப்பாக நின்று பதவிகளை தக்க வைத்திருக்கும் அணுகு முறையாகவே தென்படுகின்றது.

(June 20, 2017)