சறோவின் இழப்பு: ஆற்றுப்படுத்த முடியாத துயரம்

(சாகரன்)

1970 இன் பிற்கூற்றில் ஏற்பட்ட நட்பு. நீ எம்மை விட்டுப்பிரியும் வரை இடையறாது தொடர்ந்த நட்பு உறவு. இளைஞனாக தனித்தவனாக ஆரம்பித்த உறவு எனது மனைவியை நான் காதலியாக பெற்றபோது விரிவடைந்த நட்பு. அது என் திருமணத்தின் பின்பும் சறோவின் திருமணத்தின் பின்பும் குடும்ப நட்பாக தொடர்ந்த உறவு. உடன் பிறந்த சகோதரி போல் வளர்ந்த நட்பு.