சிந்திக்கணும் சீமான்

(த.ராஜன்)

சீமானிடம் வழக்கமாக வெளிப்படும் தெனாவட்டான பேச்சின் அடுத்தகட்ட நீட்சியாகியிருக்கிறது ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் அவர் பேசியது. ராஜீவ் காந்தி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது இன்னும் ஆறாத காயமாகவும், நம் தமிழக அரசியல் வரலாற்றில் நீங்காத கறையாகவும் தொடர்கிறது.