செம்மணி புதைகுழியை உலகறியச்செய்த கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு! அறிந்ததும், அறியாததும்

கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை நினைவுகள் அண்மையில் பல மட்டங்களிலும் மீட்கப்பட்டன. தமிழின படுகொலை வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாக ஒவ்வோராண்டும் பல தரப்புக்களாலும் இது நினைவுகூரப்பட்டு வருகிறது. 1995 யாழ் இடப்பெயர்வின் பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ்ப்பாணம் இருந்த காலப்பகுதியில் காணப்போன நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர்த்து கிருஷாந்தியின் நினைவும் இவ்வாறு ஆண்டுதோறும் மீட்கப்பட்டு வருகின்றது.