செல்வி: இவள் எங்கே?

(குஞ்சன்)

இன்றும் செல்வி மீது என்னால் சிந்திக்க முடிகின்றது. நிறைய போர், வன்முறை, அரசியல் அக்கிரகாரம் இவைகளுக்கு எதிரில் நிற்பவர்கள் இன்றும் செல்வி மீது நினைப்பார்கள். இவள் எப்படிக் காணாமல் போனாள் எனக் கேட்பார்கள். இவளது கவிதைகளை மீளவும் வாசிப்பார்கள். ஆம்! இலங்கையின் புலிப் போர் தமிழர்களின் அத்திவாரத்தை உடைத்தது, இது தமிழ் இலக்கியத்தின் அறிவியல், இலக்கியவாதிகளையும் ஒழித்தது. இப்போதும் சொல்லலாம் நிறைய வெளியால் வந்தோர் புலிகளின் ரகசியப் போராளிகளாக இருக்கின்றனர். இது வெட்கப்படவேண்டியது.

நிறையப் புத்திஜீவிகள் புலிகளின் வெறிக்கு இரையாகியுள்ளனர். ரஜனி திராணகமாவின் இழப்பு புலிகளின் வெறிக்குள்தான் நடந்தது. எப்படி இந்த யாழ்ப்பாணத்து பல்கலைகழகத்தினது உடலியல் பகுதியின் தலைவரைக் கொல்லமுடியும்? அறிவுஜீவிகளைக் கொலைசெய்து காணும் தமிழீழம் நிச்சயமாக ஓர் மிகப்பெரிய தூக்குமேடை நாடாகவே இருக்கும். தமிழர்களுக்கு நாடு இல்லாமல் இருப்பது நல்லதாகப் படுகின்றது. சிவரமணியின் தற்கொலையும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பான கவித்துவத்தைக் கொண்ட இவள் எப்படி தற்கொலை செய்தாள்? இவளது எழுத்துக்களுள் போராட்டக் குறிகளும், அடக்குமுறைக்கு எதிரான வெளிப்புகளும் தெரிகின்றன. சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம், ரேலங்கி செல்வராஜா என்று இந்த பட்டியல் நீளும்…. இன்று, செல்வி மீது ஓர் சிறு குறிப்பு. இவளை மீண்டும் நினைப்பதற்காக. இந்த நினைப்புகள் நிச்சயம் நிறையத் தேவை, ஆனால் நிறைவு தமிழ் கலாசாரத்துள் குறைவாகவே உள்ளது. எமது கலாசாரம் இப்போதும் விரத உலகத்தில் இருப்பதே. அங்கும் விரதம், இங்கும் விரதம். இந்த விரதவாசிகளில் பலர் போரின் சுவாத்தியத்தைத் தேடுபவர்கள். ஆம், காட் எடுக்க, நாசனலிட்டியைத் தவம் இருக்க நிச்சயமாக “போர்கள்” தேவைதான். போர் இல்லாது விட்டால் இந்த அகதி இலக்கியம் தோன்றியிருக்குமா? போர் எதிர்க்கப்படவேண்டியது, ஆனால் சில கலாசாரங்களுக்குள் வாழ்த்தப்பட்ட நோக்கில் இருக்கின்றது. ஆம்! எமதும் வாழ்த்துதல் கலாசாரத்தை தனக்குள் நிறையக் கொண்டது.

போரைத் தமது “மூச்சாகக்” கொண்ட புலிகளால் செல்வி கடத்தப்பட்டாள் எனச் சொல்லப்படுகின்றது. நிச்சயமாகத் தம்பியின் புலி மூளை ஆணையும் பெண்ணையும் கொல்லும் விதியைப் பழகியதே. இவர் ஹிட்லரைப் படித்திருப்பாரா என்பது எமக்குத் தெரியாது. நிச்சயமாக இவர் தமிழர்களையும், சிங்களவர்களையும் அழிப்பதில் சீரியசாக இருந்தவர். நமது தம்பி செல்வியின் கவிதைகளைப் படித்திருக்கார் எனச் சொல்லலாம். ஆனால் புலித்துவம் நிறைய இலக்கிய இதழ்களை விட்டும், தமிழ் வெறிக் கவிஞர்களைக் கொண்டிருந்தபோதும் ஓர் மிகப் பெரும் கவிஞையையும் அழித்தது. இந்த இளம் கவிஞி தனது கவிதைகளை உலக வாசிப்புக்கும் விட்டுள்ளாள் , உலகப் பரிசுகளையும் பெற்றுள்ளாள். இந்த இளம் கவிதைக் குயில் எங்கே என்று நாம் இன்றும்,நாளையும் கேட்டுக்கொண்டிருக்கலாம். செல்வியின் மீள் நினைப்புக்காக, “இனியொரு” இதழில் பிரசுரமான கவிதைகள் நன்றியுடன் பிரசுரமாகின்றன.
செல்வியின் கவிதைககள்

மீளாத பொழுதுகள்

அமைதியான காலைப் பொழுது காலைச் செம்மை கண்களைக் கவரும் காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும் நீண்டு பரந்த தோட்ட வெளிகளில் தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும் எங்கும் அமைதி! எதிலும் இனிமை! நேற்று வரையும் அமைதியான காலைப்பொழுது பொழுது புலராக் கருமை வேளையில் தட தடத்துறுமின வண்டிகள் அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!| தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்… ஆட்கள் வெருண்டனர் அள்ளி ஏற்றிய இளைஞர்கள் மூச்சுத் திணறினர். தாய்மையின் அழுகையும் தங்கையின் விம்மலும் பொழுது புலர்தலின் அவலமாய்க் கேட்டன. காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது மெல்லிய ஒலிக்கும் பயத்தையே தூண்டின – எங்கும் அச்சம்: எதிலும் அமைதி, தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்… நேற்று வரையும் அமைதியான காலைப்பொழுது! ._._._._._.
கோடை

அந்திவானம் செம்மையை விழுங்கும் அலைகள் பெரிதாய் கரையைத் தழுவும் குளத்தோரத்துப் புற்களின் கருகிய நுனி நடக்கையில்… காலை நெருடும் மேற்கே விரிந்த வயல்கள் வெறுமையாய் வானத்தைப் பார்த்து மௌனித்திருக்கும் வெம்மை கலந்த மென் காற்று மேனியை வருடும். புதிதாய் பரவிய சாலையில் செம்மண் கண்களை உறுத்தும் காய் நிறைந்த மாவில் குயிலொன்று இடையிடை குரலெழுப்பும். வீதியில் கிடந்த கல்லை கால் தட்டிச் செல்ல அதன் கூரிய நுனி குருதியின் சுவையறியும். ஒதுங்கிப் போனகல் ஏளனமாய் இனிக்கும். இதயத்தின் நினைவுகள் விரிந்து சர்ரென்று வலியெடுக்கும் வாடைக்காற்றின் சிலிர்ப்பும் வரப்போரத்தில் நெடி துயர்ந்த கூழாமரத்தின் பசுமையும் நிறைந்த குளத்தின் மதகினூடு திமிறிப்பாயும் நீரினழகுமாய் ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள் ஊமையாய் மனதுள் அழுத்தும். ._._._._._.
விடை பெற்ற நண்பனுக்கு

மின் குமிழ்கள் ஒளியுமிழ நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில் விரைவில் வருவதாய் உனது நண்பனுடன் விடைபெற்றாய் உன்னிடம் பகிர எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன. முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப. செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து வசந்தம் பாடிய குயில்களும் நீயும் நானும் பார்த்து இரசித்த கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது தலையை அசைத்தும் எனது செய்தியை உனக்குச் சொல்லும். பருந்தும், வல்லூறும், வானவெளியை மறைப்பதாக