சே குவேரா

மிகப்பெரிய புரட்சியாளர் . அவர் ஒரு பிச்சைக்காரர் போல காணப்பட்டார். அவரை உயிருடன் பிடிக்கவே, சி.ஐ.ஏ., விரும்பியது. ஆனால், பொலிவியா அரசு அவரை கொன்று விட முடிவு செய்தது. பொலிவியா ராணுவ தலைமை, சே குவேராவுக்கு – 500, கொல்ல வேண்டும் என்பதற்கு – 600, உயிருடன் வைத்து இருக்க வேண்டும் – 700 ஆகிய ரகசிய வார்த்தைகளை வார்த்தைகளை பயன்படுத்தியது.

பொலிவியா ராணுவ தலைமையிடம் இருந்து, 500, 600 ஆகிய ரகசிய வார்த்தைகள் உத்தரவாக வந்தன. அதன்படி அவர் 2 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர், ‘ நான் உயிருடன் பிடிப்பட்டு இருந்திருக்காவிடில் நன்றாக இருந்து இருக்கும். என் மனைவியிடம், மறு மணம் செய்து கொள்ளும்படி கூறுங்கள். மகிழ்ச்சியாக வாழும்படி கூறுங்கள்’ என, அவர் கூறினார். இது தான் அவர் கூறிய கடைசி வார்த்தைகள்.

குவேராவின் பொலிவியா பயணம் அதன் துரதிஷ்டவசமான தொடக்கங்களில் இருந்து மீளவே இல்லை. பொலிவியாக்கு வந்ததில் இருந்து லா கிகேரா வில் முடிவடைவது வரை ஏராளமான நெருக்கடிகள் தொடர்ந்தன.
சே குவேராவின் பொலிவியா நாட்குறிப்பு உட்பட பல ஆவணங்களின் துணையுடன் பொலிவியா காவியத்தின் அனைத்து விபரங்களும் இன்று உலகிற்கு கிடைத்து உள்ளது. அவருடைய விதி அவரை வேகமாக நெருங்கியது. சாக வேண்டும் என்று குவேரா விரும்ப வில்லை. ஆனாலும் அவருடைய இளமைப் பருவத்தில் இருந்தே தன்னலமற்ற தியாகத்தின் மூலமாக மரணமடைய விரும்பினார். இறுதியில் அந்த விருப்பத்தை அவர் நிறைவேற்றினார்.