ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கின் ‘பிடி’

(இலட்சுமணன்)

ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இவை மூன்றும், அடுத்த வருடத்துக்குள் நடைபெறத்தான் போகின்றன. அவை நடைபெறும் ஒழுங்கில், மாற்றம் நிகழலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலே, முதலில் நடைபெறுவதற்கான அரசியல் காரணிகள் அதிகம் காணப்படுகின்றன.