ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சியின் பின்னணி என்ன?

(Maniam Shanmugam)
இலங்கையில் ஜே.வி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) 1971 ஏப்ரல் 05ஆம் திகதி ஆயுதக் கிளர்ச்சி நடந்து இம்மாதம் 05ஆம் திகதியுடன் 49 ஆண்டுகள் – அதாவது ஏறத்தாழ அரை நூற்றாண்டு – முடிவடைந்துவிட்டது. பலத்த உயிர் இழப்புகளுடன் தோல்வியில் முடிவடைந்த அந்தக் கிளர்ச்சி இன்று இலங்கை வரலாற்றின் ஒரு அத்தியாயமாகிவிட்டது.