தந்திரோபாய அரசியலும் தப்பித்தலும்

(கருணாகரன்)
வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலே தாக்குதல் நடந்தாலும் வடக்குக் கிழக்கில்தான் பாதுகாப்புப் பலப்படுத்தப்படுகிறது. சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் நிச்சயமாக அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் உளவியல் சார்ந்த காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம். அந்த உளவியல் தமிழர்களை இன்னும் சந்தேகித்தல் மற்றும் தமிழ்ப்பகுதிகளில் படைகளின் இறுக்கத்தைத் தொடர்ந்தும் பேணுதல். இது உண்மையென்றால் இது ஒரு நோய்க்கோளாறே.