தன் வாழ்வால் எங்களுக்கு வழிகாட்டியவர் றொபேட்

(தோழர் மோகன்)

தோழர் றொபேட் ( தம்பிராசா சுபத்திரன்) சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல், சமூக பிரச்சினைகளில் பிரக்ஞை கொண்டு செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக 23 வருடங்கள் தொடர்ச்சியாக அவர் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் முன்னணியிலிருந்து கருமமாற்றியவர். அவரது 17வது நினைவு தினம் இன்றாகும்.