தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை

(அ.விஜயன்)

சிவகங்கை மாவட்டம் தாழையூர் முகாமில்  வசித்துவரும், சுரேஸ்குமார், சிவாஜினி தம்பதிகள் யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் எற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் 2009 இல் அகதிகளாக தழிகத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள்  வினோதரன், சாதுரியா என இரண்டு பிள்ளைகள் இதில் வினோதரன் தேவகோட்டையில் உள்ள இன்பான் ஜீசஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

வினோதரனுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருப்பதை கண்டறிந்த பள்ளி நிர்வாகம் அவனை அதற்கான போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளது. வட்டார அளவில் வெற்றியை பெற்ற வினோதரன் மாவட்ட அளவில் இலகுவாக தேர்வாகியுள்ளார். இதனால் அவர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியிலும் தேர்வாகியுள்ளார். அதன் பின்னர் அவர் தேசிய அளவில் தேர்வானபோது அதனில் பங்கேற்க  அவருக்கு வாய்ப்பளிக்காமல் தடைசெய்துள்ளார்கள்.

என்ன காரணம் என அவரது பெற்றோர் சென்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள்  இந்தியர் இல்லை என காரணம் காட்டி  அவர் தேசிய அளவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு நழுவிச் சென்றுள்ளது. இந்தத் தடையினை காரைக்குடி சதுரங்க சங்கமே செய்துள்ளது. அந்த மணவனின் பெற்றோர் அந்தச் சங்கத்துடன் பேசிப்பலனில்லாமல் அடுத்தகட்டத்தை எப்படி தாண்டுவது என அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இந்த இடத்தில் இந்திய குடியுருமை எனும் விடயமே பிரதானமாகவுள்ளது. தமிழகத்தில் உள்ள அகதிகளில் சிலர் இந்தியக்குடியுருமை தொடர்பாக பேசிய வண்ணமே உள்ளார்கள். அவர்களுக்கு இது எட்டாக்கனி என்பதை அவர்கள் உணரமறுக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அகதிகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை என்பது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அது மட்டுமல்ல சண்டை நடைபெற்றதால் அகதிகளாக வந்துள்ளவர்கள் சண்டை முடிந்த பின்னர் போக வேண்டியதுதானே என்று இதுவரை   சொல்லாவிட்டாலும் அதுதான் எழுதப்படாத ஒரு விடயமாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் முகாம்களிலோ, வெளியிலோ எவரையும் பதிவு செய்யவதில்லை. இது 2009 இலிருந்து நடைமுறையில் உள்ளது. இது ஒரு அரசாணையாக இருப்பதால் பதிவு செய்யப்படாத பலர் நாட்டுக்குத் திரும்புவதற்கு சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் இருக்கும் இலங்கையர்கள் முகாமிலோ அல்லது வெளியிலோ பதிவு பெற்றுத்தான்  தமிழகத்தில் இருக்கவேண்டும்.

தற்போது பலர் விமானத்தில் ஐக்கிய நாடுகள் அனுசரனையுடன் நாடு திரும்புகிறார்கள்                                       இதனை கப்பல் மூலம் செய்தால் நாடு திரும்புகிறர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு இந்திய, இலங்கை அரசுகளின் ஒத்துழைப்பு வேண்டும். என் மக்களை அனுப்பு என இலங்கை அரசு இது வரை கேட்காமல் கள்ள மௌனம் காப்பது எதற்காக என புரியவில்லை.

தமிழகத்தில் உள்ள சில அகதிகள் கள்ளப்படகேறி இலங்கை செல்கிறார்கள். இப்படிச் செல்பவர்கள் எங்கும் பதிவில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் சட்டரீதியான எந்த முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு இவர்களுக்கு முகாம் பதிவோ, வெளிப்பதிவோ கட்டாயம் தேவைப்படும். பதிவு இல்லாத  காரணத்தால் இவர்கள் முறைகேடாக சட்டத்தை மீறி படகேறிச் செல்கிறார்கள்.

நீண்ட நாட்களாக அகதி மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளினால் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி மத்திய, மாநிலஅரசுகள் இலங்கையில் இடம்பெயர்ந்து வந்த மக்களை என்றும் இருவேறு கண்கொண்டு பார்த்ததில்லை.

வினோதரன் தேசிய அளவில் சதுரங்க போட்டியில் விளையாட தடைவிதித்ததையிட்டு அந்த குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. திறமையை  இன, மொழி, சாதி, சமயம், நாடு பாராது ஊக்குவிக்க வேண்டும். அந்த மாணவனின் வளர்ச்சியில்  உரிய சதுரங்க அமைப்பு நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும். அவ்வமைப்பு அகதி மக்களின் நிலைகுறித்து  சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் பதிவில்லாதவர்களுக்கு, பதிவு வழங்கி அவர்கள் நல்லமுறையில் தாயகம் திரும்ப நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டும்.