தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும்

(இலட்சுமணன்)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது. இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை வளர்த்துக் கொண்டதாகக் காணமுடியவில்லை. அவை, கடைந்தெடுத்த சுயலாபம் கருதிய நடத்தைகளாலேயே தமக்குள் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்து உள்ளன.