தமிழ் நாட்டுத் தேர்தல்…

இதனை விட இன்னொரு சிறப்பு இதுவரையும் தமிழ் நாட்டில் இந்த அளவிற்கு சித்தாந்தங்களை முன்னிறுத்தி அதன் அடிப்படையில் மாநிலத் தேர்தல் நடைபெறவில்லை. முதல் முறையாக விசேடமாக மதச் சார்பின்மையிற்கும், மதச் சார்பிற்கும் இடையிலான சித்தாந்தங்களை முன்னிறுத்தி இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது
மதசார்பின்மை கொண்டிருக்கும் மாநில சுயாட்சி சமூக நீதியை கருத்தியலாக கொண்ட திமுக, மதசார்பின்மையை சிறுபான்மை மக்களின் நலன் மாநில நலன்களைப் பாதிக்காத தேசியக் கொள்கை என்ற அடிப்படையில் காங்கிரசும், மக்களின் சமத்துவமான வாழ்வாதாரத்தை வலியுறுத்தும் இடதுசாரிகள், பிற்படுத்தப்பட்டோர், சாதி அடிப்படையில் விளம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை ஏற்புடமையை கருத்தில் கொண்டு செயற்படும் விடுதலைச் சிறுத்தைகளும், முஸலீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் கட்சிகள் என ஒரணியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

மறு அணியில் மாநில் உரிமை என்று தேர்தல் கோஷத்தை வைத்தாலும் மத்தியில் ஆளும் பாஜக வின் மாநில உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டிற்கு மௌனம் சாதிக்கும், மதச்சார்மின்மையை வலியுறுத்தாத கட்சியாகவும் பாஜக வின் ஊதுகுழலாக செயற்படும் அதிமுகவும், மதச்சார்பு சிறப்பாக இந்துவத்துவா கொள்கைளை சுமக்கும், மாநில உரிமைகளை காவு கொள்ளும் கட்சியாக பாஜக வும், சலுகை அரசியலை தனக்குள் உள்வாங்கி வன்னியருக்கான கட்சியான பாமக வும் ஒரணியில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
திராவிடத்தை நிராகரித்து தமிழ் தேசியம் பிரபாகரன் தமது தலைவன் என்று புறப்பட்ட நாம் தமிழர் கட்சி தனியாவும் களம் காணுகின்றது.

இதுவரை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளின் செயற்பாடுகள் சரியில்லை, ஆளுமை மிக்க கருணாநிதி ஜெயலலிதா இல்லாத இடத்து ஏற்பட்ட தலமை வெற்றிடத்தை நிரப்பவென மக்கள் நீதி மய்யம் தேர்தல் களம் காண்கின்றது ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து.
அமமுக, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் சசிகலாவை தமது மானசீல தலைவராக ஏற்று திராவிட பாரம்பரியத்தில் தேர்தலை வேறு சில கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தல் களம் காணுகின்றன.

ஐந்து முனைப் போட்டியாக தோற்றம் அழித்தாலும் உண்மையில் இந்தத் தேர்தலில் இரு முனைப் போட்டியாகதான் இருக்கப் போகின்றது. அது திமுக தலமையிலான கூட்டணி, அதிமுக தலமையிலான கூட்டணி. போட்டியில் உள்ள ஐந்து கட்சிகளில் நான்கு கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் திமுக வை வீழ்த்துதல் என் கோதாவில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அயல் நாட்டில் தேர்தல்…. அயலவர் வீட்டில் தேர்தல்… தொப்புள் கொடி உறவுகள் வாழும் இடத்தில் தேர்தல் நம் பேசும் மொழி பேசுவர்கள் வாழும் மாநிலத்தில் தேர்தல இப்படி பலவாறு தமிழ் நாட்டுத் தேர்தலை நாம் அழைக்கலாம் ஏன் எனில் எம்மில் பலரும் தமிழ் நாட்டை அவ்வாறுதான் உணருகின்றோம்.

அவர்களும் எம்மையும் முன்நிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பது ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த நாட்களில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

அவர்கள் தமது தேர்தல் வெற்றிக்காகத்தான் இதனை அதிகம் பாவிக்கின்றார்கள் மாறாக ஈழத் தமிழர் நலன்களின் அதிக அக்கறையில் என்பதில் அல்ல என்பதே உண்மை
அதற்கு நல்ல உதாரணம் கடற் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக கடற் தொழிலாளர்களால் அதிகம் பாதிக்கப்படுவது அனேகம் இலங்கை வாழ் கடற்தொழிலாளர்கள். அதிலும் சிறப்பாக வட பகுதி கடற் தொழிலாளர் அதிகம் பாதிகப்படுகின்றனர். உண்மையில் சிங்கள கடற்தொழிலாளர்கள் தமிழகத்து கடற் தொழிலாளர்களால் நேரடியாக எமது வளங்களை சூறையாடுதல் என்ற வகையிற்குள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

இந்த கடற் தொழிலாளர் விடயத்தில் தமிழக கடற் தொழிலாளர்களின் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி செயற்படுவதை காணாதது போல் அவர் சரியென வாதிடும் தமிழகக் கட்சிகளை மீறி யாரையும் அங்கு காண முடியாது. அது சீமானில் இருந்து ஆரம்பித்து ஸ்டாலின் வரையும் இதுவே உண்மை.

மற்றயது கச்சைதீவு உரிமை பிரச்சனை உண்மையில் கச்சைதீவு இலங்கையின் பகுதி என்றாலும் அது உண்மையில் வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமமாக காணப்படுகின்றது. அதனையும் தாம் மீட்டெடுப்போம் இலங்கை அரசிடம் இருந்து என்பது தமிழர்களின் ஒரு நிலத்தை கையகப்படுத்தும் விடயமாகவே நாம் பார்க்க வேண்டும்;
இதற்கு அப்பால் மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் சிறப்பாக தமிழ் நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் அவர்களுக்கு அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்று வேலை செய்யும் யாவரும் இன்று வரை அகதிகளாகவே இருக்கின்றனர் இதற்கு மேலான அந்தஸ்து ஏதும் இல்லை அவர்களுக்கு.

இது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விடயம் என்றாலும் அதற்கான உண்மையான அழுத்தம் கோரிக்கையை தமிழ் நாடு அரசியல் கட்சிகள் முன்வைக்கவில்லை. தேர்தல் வாக்கிற்காக அங்காங்கே சில குரல்கள் சில காலங்களில் எழுப்பப்படுன்றன. அதற்கு மேல் ஏதும் இல்லை.
சரி பிரஜா உரிமை அந்தஸ்தை விட்டாலும் வேலை வாய்ப்பு, வாழ்வுரிமை என்பனவற்றில் மாநிலத்திற்குள் உட்பட்ட வகையில் செய்யக் கூடிய வகையிலும் செய்யவில்லை தமிழ் நாடு. குறைந்த பட்டம் சிறிய வாழ் நிலம் வழங்கி வசிவிடம் அமைத்துக் கொடுத்தல் என்பது போன்ற விடயம் ஏதும் கொள்கை அளவில் கூட நடைபெறவில்லை.

மாறாக அகதிகள் முகாம் வாழ்க்கையும் பொலிஸ் பதிவும் கடவுச் சீட்டை பயன்படுத்த முடியாத திறந்த வெளிச் சிறைச் சாலை வாழ்க்யை இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டில் கொண்டிருக்கின்றனர்.
இவை எல்லாம் எதைக் காட்டுகின்றது என்பது தமிழகத் தேர்தலில் கட்சிகள் ஈழத் தமிழர் நலன் என்பது தங்கள் தேர்தல் வெற்றிகாக பாவிக்க முற்படும் வெற்றுக் கோஷங்களுக்காகவே. நிலமை இவ்வாறு இருக்கும் போது ஈழத் தமிழரின் அரசியல் தீர்வு உரிமை பற்றி அவர்கள் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டார்கள் செயற்படுகின்றார்கள் என்று எவ்வாறு நாம் எதிர்பார்க்க முடியும் வேணும் என்றால் எமக்கு ஒரு ஆதரவுச் சக்திகளாக ஒரு மட்டத்த்தில் செயற்படுவார்கள் அவ்வளவே.

இதற்கு அப்பால் கமராஜரின் மக்கள் நலன் செயற்பாடுகளுடன் ஆரம்பித் தமிழக அரசாட்சி பெரியாரின் சமூக நிதிக்கான போராட்டமும் இன்று தமிழ் நாட்டை கருத்தியல் ரீதியிலும் மாநில வளர்ச்சி ரீதியிலும் வாழ்க்கைத் தரத்திலும் ஒரு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் மாநிலமாக இந்தியாவில் மாற்றியிருக்கின்றது.

திராவிடம் என்ற சிந்தனையும் அதற்காக பல் தேசிய(குறிப்பாக தென் மாநிலத்தவரின்) இணைவுகளின் இணைப்பாக உருவான தலைநகரம் சென்னை, ஏனைய எல்லை மாவட்டங்களில் உள்ள வேற்று மொழிகாரர்களையும் இணைத்து வாழும் அந்த வாழ்வு திராவிடம் என்பதன் கருத்தியலின் அடித்தளத்தில் இருந்து உருவானதே.

தமிழன் என்ற குறும் தேசியத்திற்குள் மூழ்காமல் வாழ்வதற்குரிய ஒருவகை பன்முகத் தன்மையை உருவாக்கியிருப்பதற்கும் இந்த பெரியாரின் சமூக நீதிக்கான செயற்பாடுகளும் அதன் வழி தோன்றிய திராவிடக் கட்சிகளும் காரணமாக அமைந்திருக்கின்றன.

இதற்கு வேட்டு வைக்கும் வகையிலாக பாஜகவின் இந்தியா முழுவதுமாக இந்துவத்துவ ஒரு மொழி ஒரே இனம் ஓரே தேசம் என்ற மேலாதிக்க சிந்தனை தமிழ் நாட்டிலும் ஏன் கேரளா போன்ற மாநிலங்களில் எடுபடவில்லை எடுபடக் கூடாது என்பதற்கேற்ற செயற்படும் திமுக தலமையிலான இடதுசாரிகள் காங்கிரஸ கூட்டணி பெரு வெற்றி பெறப்போவது உறுதி என்பதற்கு அப்பால் வெல்லப்பட வேண்டும் என்பதே தேவையானது.

திராவிட பாரம்பரியத்தில் உருவான எம்ஜிஆர் தலமையிலான அதிமுக ஜெயலலிதாவின் கையிற்கு மாறிய பின்பு சமூக நீதிகான கட்சி என்ற நிலையில் இருந்து மாறி திரு நீறும் குஞ்குமமும்; பொட்டுமாக மாறி காலில் வழும் கலாச்சாரமாக மாறி விட்டது. அதனால் ஜெயலலிதாவின் மறைவு தைரியமான தமிழ் நாட்டிற்கான முதல் அமைச்சர் என்பதை தாண்டி பாஜகவின் ஒரு துணை அமைப்பாக மாறிய நிலையில் அது தோற்கப் போகும் நிலமையில் உள்ளது அதுவும் பாரிய தோல்வியை சந்திக்கும்.

அவர்களில் ஏற்பட்;டபிளவு ஏற்படாவிட்டாலும் இது நடைபெற்றே இருக்கும் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு அவர்களுக்கான தோல்வியை அதிகப்படுத்தியுள்ளது.

புதிதாக உருவான சீமானின் கட்சியும் கமலின் மய்யமும் தினகரனின் அமமுக வும் அடிப்படையான கட்டமைப்புகளை அதிகம் கொண்டிராதபடியால் அவர்களின் ஆதரவு வாக்குள் மட்டும் பெறும் சூழலில் அடித்தள வாக்குகள் இருந்திருதால் அதற்கு மேல் இந்த ஆதரவு வாக்குளை சேரும் போது வெற்றிகள் சிலவற்றை தமதாக்கிக் கொண்டிருக்க வாய்புகள் ஏற்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இந்தத் தேர்தலில் அதிகம் இல்லை.

அந்த வகையில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் மொத்தமாக 15 வரையிலான இடங்ளை பெறக் கூடிய வாக்குகள் இந்த மூன்று கட்சிகளும் மொத்தமாக பெறலாம். இதன் அர்த்தம் இவர்கள் இத்தனை தொகுதிகளை வெற்றியீட்டுவார்கள் என்பதல்ல வெல்லலாம் சுமாராக 15 தொகுதிகள் வரை.

மிகுதியாக உள்ள தோரயமாக 220 தொகுதிகளில் 180 வரை திமுக கூட்டணியிற்கும் எனைய 40 தொகுதிகள் அதிமுக கூட்டணியிற்கும் கிடைக்கலாம். இந்த 40 இல் ஏதாவது குறைவு ஏற்பட்டால் அது திமுக விற்கே அவை அதிகம் செல்லும். இங்கு என் பார்வை எத்தனை தொகுதிகளில் வெல்லுவார்கள் என்பதை விட என்ன வீதத்தில் வாக்குகள் பெற்றுக் கொள்வார்கள் என்பதுதான்.

பாரிய சதவிகித வாக்குகள் கிடைத்தால்தான் ஒரு தொகுதியில் வெல்ல முடியும். இது விகிதாசாரப் பிரநிதித்துவத் தேர்தல் அல்ல இலங்கை போன்;று எனது பார்வையை விகிதாசாரரப் பிரநிதித்துவ தேர்தலாக கருத்தில் எடுத்து ஆதரவுத் தளத்தை இங்கு சொல்லவிளைகின்றேன். எதிர் காலத்தில் கட்சிகளின் வளர்ச்சி எவ்வாறு அமையலாம் என்பதை எதிர்வு கூறுவதற்காக அவ்வாறு அணுகுகின்றேன்.

இறுதியாக பழக்க வழங்கங்கள் உணவு முறை வாழ்விடச் சூழல் ஏன் மொழி வேறுபட்டாலும் தமிழ் நாட்டு மக்கள் எங்கள் வேகமான தமிழ் உரையாடலை நீங்கள் கேரளாவா என்று கேட்க வைக்கும் விடயம் என்ற பாங்கு (உண்மையில் எமது தமிழ் திருநெல்வேலியை ஒத்தாக இருக்கும்) என்பவற்றலால் ஒன்றாக உணரும் கேரளாவின் தேர்தல் முடிவுகள் பற்றி….

இங்கு இடதுசாரிகள் காங்கிரஸ் என்று மாறி மாறி ஆட்சி அமைவது வழக்கம். மிகவும் வளர்ச்சியடைந்த சீரிய மாநிலம் இது. 95 வீதத்திற்கு மேலானவர்கள் கல்வி அறிவு பெற்ற மாநிலமாகவும் இருக்கின்றது காங்கிரஸ் ஆளும் காலங்களிலும் இடதுசாரிகளின் சாயல் உடைய மாநிலம் இது. இங்கு இம்முறை வழமையிற்கு மாறாக மீண்டும் கம்யூனிஸ்;டுகள் ஆட்சி அமைப்பதற்குரிய வாய்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் காங்கிரஸ் கடுமையான போட்டியை கொடுக்கும்.

புதுச்சேரியில் பாஜக தனது என்ஆர் காங்கிரஸ் அதிமுக கூட்டமைபை வெல்வதற்கு என்ஆர் காங்கிரஸ் இன் ஆதரவுத் தளம் வாய்ப்பை கொடுக்கும் என்று நம்பினாலும்… திமுக, காங்கிரஸ், இடதுசாரிகளின் தமிழகம் போன்ற கூட்டமைம்பு சரியான போட்டியுடன் வெற்றிக் களத்தை அமைப்பர்.

இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜகவின் வட மாநிலங்களில் செய்யும் தேர்தல் நேரத்தில்… தேர்தலுக்கு பின்பு… முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு ஆன சித்து வேலைகள் எடுபடாது என்பது என் எதிர்பார்பாக அமைகின்றது.

தேர்தல் முடிவுகளை தனது சித்து விளையாட்டால் மாற்றுமல் அல்லது தேர்தலுக்க பின் தனது வெருட்டல் சித்து விளையாட்டால் தனது ஆட்சியை அமைத்தல் இந்த மூன்று இடங்களிலும் பாஜகவினால் முடியாது என்பதுவே தென் மாநிலங்களான இந்த மூன்று மாநிலங்களின் சிறப்பாக தொடரும் என்று நம்புவோம்.

ம்…… பொறுத்திருந்து பார்போம்