தமிழ் மக்களை வன்மையாக கையாண்டதை போல் அல்லாமல் முஸ்லிம் மக்களை அரசாங்கம் மென்மையாக நடத்த வேண்டும்

  • முன்னாள் அமைச்சர் பஷீர் கோரிக்கை

பாதுகாப்பை விஸ்தரிக்கின்ற விடயங்களை அரசாங்கம் மிக அவதானமாக, நேர்மையாக மேற்கொள்ள வேண்டி உள்ளது, சாதாரண மக்களை மென்மையாக நடத்த வேண்டும், தமிழ் மக்களை வன்மையாக கையாண்ட வரலாற்று தவறு மீண்டும் செய்யப்படவே கூடாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.