‘தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி’

நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக் கூடாது. இதிலிருக்கின்ற முரண்பாடுகளைக் களைவதற்கும் எல்லை நிர்ணயத்தில் காணப்படும் சில சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அதனூடாக, நிதானமான முறையில், கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தைக் கையாள வேண்டுமென்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.