தளம் – 04 – ஈழத் தமிழ் அரசியல் நேற்று, இன்று, நாளை

(தமிழ் விவாதிகள் கழகம்)

ஈழத்தமிழ் அரசியலை நோக்குகின்ற போது மூன்று போக்குகளை அவதானிக்கலாம்.

முதலாவது கோட்பாட்டு ரீதியான சிந்தனைப்போக்கு, இது தமிழரின் விடுதலை அடைவது பற்றிய கோட்பாட்டுருவாக்கம், தமிழ்த்தேசியம்,சுயநிர்ணயம், தனிநாடு போன்றவற்றை உள்ளடக்கியது. இரண்டாவது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுசார் சிந்தனைப்போக்கு, இது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான செயன்முறை சார்ந்தது.