தவறுகளின் மூலம் எங்கே? பொள்ளாச்சி

(Vijaya Baskaran)

சம்பவம் 1 பணத்திமிரும் வளர்ப்பும்

எனது சாவகச்சேரியில் ஒரு வசதிபடைத்த வர்த்தகர் ஒருவர் இருந்தார்.அவரது மகள் சைக்கிள் ஓட்டத்தில் ஆர்வம் மிக்கவர்.அவர் காலையில் தினமும் கொடிகாமம் நோக்கி சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளுவார்.அவரது இரு பக்கமும் மோட்டார் சைக்கிளில் அண்ணன்களும் கூடவே வருவார்கள்.யாராவது தப்பித் தவறி அந்தப் பெண்ணைப் பார்த்தால் தூசண வார்த்தைகள் அண்ணன்கள் வாயிலிருந்து வரும்.இந்த அண்ணன்களோடு தடியன்களும் வருவதுண்டு.