திண்ணைப் போர்

(கே. சஞ்சயன்)
‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஒரு ‘பிடி’ பிடித்திருந்தார். ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்ற பழமொழி, அரசியலுக்கே நன்கு பொருந்தும். அரசியலில் இவ்வாறான எதிர்பார்ப்புகள் பலரிடம் இருப்பது உண்மை. எல்லோராலும் அரசியலில் வெற்றியைப் பெறமுடியாது.