தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி ஊர்வலத்தின் 54ஆவது ஆண்டு நினைவாக…

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் 1966 ஒக்ரோபர் 21இல் “சாதி அமைப்பு தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட்டும்!!” என்ற விண்ணதிர்ந்த கோசங்களுடன் ஊர்வலம் ஒன்று இலங்கையின் வட பகுதி நகரான சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கிப் புறப்பட்டது. அந்த ஊர்வலத்தை நடத்தக்கூடாது என அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொலிசார் தடை விதித்தபோதும் ஊர்வலம் திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.