தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)

இரத்தினத்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை எமக்கு மட்டுமல்ல அன்று போராடிக்கொண்டிருந்த எல்லோருக்கும்,அவரை அறிந்தவர்களுக்கும் ஏற்படுத்தியது.எமது எதிரிகள் கொடிகாம்ம் அய்யாவுக்கும் எதிரிகள்.அவரும் கொஞ்சம் நிலை குலைந்தார். இதுவரை கட்டுப்பாட்டோடு இருந்த எமது ஊர் இளைஞர்கள் பயப்படவில்லை.மிக ஆவேசம் கொண்டனர்.உறவுக்கார்ர்கள் அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமாக செயற்பட அன்றிரவே குழுக்களாக எதிரிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தேடினர்.அவரகளின் திட்டம் அங்கே ஒரு பிணம் விழவேண்டும்.சந்தேகத்துக்கு உரிய தில்லைநாதன்,இராசரத்தினம்,சின்னக்குட்டி என பலர் வீடுகளில் இரவுத் தேடுதல் நடாத்தினர்.யாரும் அகப்படவில்லை.ஒரு மாதம் வரை தொடர்ந்தது.கொலையாளிகள் யாரும் வாய்திறக்கவில்லை.

இதில் முனைப்பாக நின்றவரகள் சின்னத்தம்பி செல்லத்துரை( நடராசாவின் மைத்துனர்) கட்டை செல்லத்துரை (நடராசாவின் தம்பி,)
ஆறுமுகம்,சிறீ ஜெயச்சந்திரன் ஆகியோர்.இதனிடையே இரத்தினத்தின் மைத்துனர்களான மாணிக்கம் ராசன்,மாணிக்கம் சின்னதம்பி ஆகியோர் குடும்ப பொறுப்புகள் காரணமாக ஒதுங்க வேண்டியதாயிற்று.சின்னதம்பி செல்லத்துரையும் குடும்பகார்ர்தான்.ஆனால் அவர் தீவிரமாக பழிவாங்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்.ஜெயச்சந்திரன் மிக இளைஞர். அவரின் நேரத்துக்கு உரிய தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டபோதும் தங்கையோடு அலைந்தபோதும் தன் பங்களிப்பை குறைக்க வில்லை.

இவர்களோடு ஊர் இளைஞர்கள் அனைவரும் துணிவாக கைகோர்த்தனர்.இரத்தினம் இருந்தபோது உறங்கியவரகளால் இப்போது உறங்க முடியவில்லை.எமது ஊரவரகளுக்கே தெரியாது எவனெவன் எங்கே போகிறான் என்று.

இதனிடையே வரணி குடமியன் பகுதியில் இருவர் இரத்தினம் கொலையில் சம்பந்தப்பட்டதாக பெருமையடித்த கதை உலாவந்தது.எமது ஊரவர்கள் திட்டம் கொலையாளிகளை அவர்கள். வீட்டில் வைத்தே கொல்வது. ஆனால் எவரும் அப்படி அகப்படவில்லை.குடமியன் பகுதியை சேரந்தவரகள் சில நாட்களில் கொல்லப்பட்டனர் .மிக இரகசிமான முறையில் கொல்லப்பட சந்தேகத்துக்கு உரியவர்கள் தலை மறைவாகி விட்டனர்.இரத்தினத்துக்கு ஒரு பெயர் காட்டுவாடி.அவரகள் சொன்னாரகளாம் நாங்கள் நினைத்து ஒரு காட்டுவாடி ஆனால் அங்கே நூறு காட்டுவாடிகள் இருக்கிறார்கள்.

இதேவேளை பனியன் ராசன் எந்த அச்சமும் இன்றி அனுராதபுரம் யாழ்ப்பாணம் பஸ் ஓடிக்கொண்டிருந்தான்.அவனில் ஆத்திரம் இருந்தபோதும் வஞ்சம் தீர்க்க வெளிக்கிட்டால் ஊர் இரண்டுபடலாம்.அவனும் தன் இருப்பிடத்தை அனுராதபுரத்துக்கு மாற்றிவிட்டான்.பின்னாட்களில் அவன் பணம் வாங்கியதை பலர் உறுதி செய்தனர்.

இதனிடையே எமது ஊர் வாசிகசாலையை தியாகி இரத்தினம் சனசமூக நிலையம் என நடராசா பெயரை மாற்றினார்.அதில் தன் மைத்துனர் பனியன் ராசனை பாதுகாக்கும் உள்நோக்கம் இருந்தது.இரத்தினத்தின் மரண சடங்கில் கொடிகாம்ம் அய்யாவும்,தம்பி தபால் சாமியும் கலந்து கொண்டனர்.அப்போது நடராசா உங்கடை ஆட்கள் செய்த வேலையைப் பாருங்கள் என ஆட்களின்முன்னே அய்யாவை நோக்கி கேட்டாராம். அப்போது அவர் தம்பி சாமி உன் மச்சான்தானே காட்டிக்கொடுத்தவன் என கூற நடராசா சத்தமின்றி விலகிவிட்டார்.

சின்னத்தம்பி செல்லத்துரை,செல்லத்தம்பி சிறி ஜெயச்சந்திரன் ,நல்லையா ஆறுமுகம் ஆகியோர் சங்கானை பிரேத ஊர்வலத்தில். நமது ஊர் சார்பாக கலந்து கொண்டவர்கள்.அந்த துப்பாக்கி வேட்டுக்கள் மத்தியிலும் சங்கானை தோழர்களுடன் களம் நின்றவர்கள்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)