தோழர் இராஜனின் 34வது ஆண்டு நினைவில்;………..

தோழர் இராஜன் (இரவீந்திரன்) யாழ் மாவட்டத்தில் கோப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவர். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் பொதுவாழ்க்கையில் தன்னை அற்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டவர். ஈழமாணவர் பொதுமன்றதின் (GUES) நிர்வாகக்குழு உறுப்பினராக செயற்பட்டவர். போராடுவதிற்காக கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்வதிற்காக போராடவும் மாணவர்களை அணிதிரட்டினார். அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பிரதான செயற்பாட்டாளராக விளங்கியவர். 1980களில் ஈழமாணவர் பொதுமன்றதினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துவகையான போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளிலும் களச்செயற்பாட்டாளராக இயங்கியவர்.