தோழர் . முகுந்தன்

(Sugan Paris)

(ஆறுமுகம் முருகநேசன் ,பேராதனைப் பல்கலைக்கழக விவசாயபீட விரிவுரையாளர்)

மாகாணசபை நெருக்கடிக்குள்ளானபோது அதன் முன்னணி செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேறுவழியின்றிப் பின்வாங்கவேண்டியிருந்தது. கடல் வழியேயும் விமானப் பயணமாகவும் சென்ற அந்த இறுதி நாட்களில் முகுந்தனுக்கு விமானவழி பரிந்துரைக்கப்பட்டும் அதை மறுத்து கடைசித் தோழர்களையும் கடல்வழியே அனுப்பிவைக்கும் ஏற்பாட்டில் தானும் அவர்களுடன் கடைசியாளாகப் படகேற முயன்றபோது
அத் தொகுதியை முழுதும் புலிகள் கைதுசெய்தனர். அதில் முகுந்தன் இருப்பது கைது செய்தவர்களுக்குத் தெரியாது.