நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.

ஏதாவது ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்து அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்கின்ற நிலை வரும்போதெல்லாம் புதிதாக ஒன்று தோன்றி அவர்களின் அரசியலை நீடித்துக்கொண்டே போகின்றதே!

காணிகள் விடுவிப்பு, மீள் குடியேற்றம், விசஊசி இந்த வரிசையில் அடுத்து இவர்களின் பிழைப்பை ஓட்ட கைகொடுக்க இப்போது சேர்ந்திருப்பது விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள்.

இனி என்ன உடைக்கப்பட்ட துயிலும் இல்லங்களை மீள கட்டப்போகின்றோம் என கிளம்ப வேண்டுயதுதானே? அவர்கள் கடைசி வரைக்கும் மீள கட்ட விடமாட்டார்கள். இவர்களும் அதை வைத்து பல காலத்துக்கு அரசியலை ஓட்டி கள்ளாவை நிரப்ப முடியுமே அள்ளிக்கொடுக்கவும் புலம்பெயர் தமிழரகளும் பொங்கிதள்ள தமிழ் ஊடகங்களும் இருக்கும் வரை தயக்கம் ஏன் மை டியர் தேசியவாதிகளே?

நாளைக்கே களத்தில் குதியுங்கள். கள்ளாவை நிரப்புங்கள்.

( சும்மா இருந்தவன்களுக்கு ஐடியா கொடுத்துவிட்டோமோ!)

(RajH Selvapathi)