நல்லிணக்கம் = பாரபட்சம்

(லக்ஸ்மன்)

வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு, தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும் என்றே தமிழர் தரப்பு ஒவ்வொரு தடவையிலும் தேர்தலில் குதிக்கிறது.  கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு ஒப்பான அந்தப் பேச்சுக்காக கிடைக்கின்ற வாக்கும் சரி, ஆசனங்களும் சரி குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எதிர்ப்புணர்வுகளால் உசுப்பேற்றுபவர்களுக்கு ஆசனங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்கு நடந்து முடிந்த தேர்தலும் நல்ல சாட்சி.