நாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி

(எம். காசிநாதன்)
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம், களைகட்டி விட்டது. இரு பிளவுகளான அ.தி.மு.கவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முதலில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. நேற்று வரை கடுமையாக, அ.தி.மு.க ஆட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணி, அ.தி.மு.க அலுவலகத்திலோ, பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திலோ நடைபெறவில்லை.