நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ

(புருஜோத்தமன் தங்கமயில்)
கொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர்.